Tuticorin

News February 14, 2025

தூத்துக்குடியில் விவசாய நிலங்கள் கணக்கெடுப்பு முகாம்

image

மத்திய அரசின் வேளாண் அடுக்குத் திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணிக்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தங்களுடைய பட்டா ஆதார் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனையும், முகாம்களுக்கு கொண்டு சென்று தங்களின் நில உடமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி நேற்றைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் வேலை!

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். <>தூத்துக்குடி மாவட்டத்தில்<<>> மட்டும் 36 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 14, 2025

தூத்துக்குடியில் புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை

image

தூத்துக்குடியில் போட்டோ வாக் நடைபெற்றது. ரோச் பூங்காவில் இருந்து துவங்கி எக்கோ பார்க் படகு குளம் வரை நடைபெற்றது. இதில் தனியார் நிறுவனங்களான சோனி, கேனான் மற்றும் நிக்கான் பயிற்சியாளர்கள் பங்குபெற்று புகைப்படக் கலைஞர்களுக்கு காலைப் பொழுது சூரிய ஒளியில் எப்படி சிறந்த புகைப்படம் எடுப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கினர். இதில் விளாத்திகுளம் வட்டார புகைப்படக் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.

News February 14, 2025

மினி பஸ்: தூத்துக்குடி கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு 56 வழித்தடங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேற்று(பிப்.13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி குகுகிராமங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடங்களானது அமைந்துள்ளன. எனவே தனியார் பேருந்து ஆபரேட்டர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News February 13, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் 28ஆம் தேதி பார் மூடல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி மதுபான பார்களை மூடி அனைத்து கடைகளையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் பாரில் அதிக அளவு பணம் அரசுக்கு செலுத்தப்படும் நிலையிலும், ஆனால் போதிய வருவாய் இல்லாததால் இந்த நடவடிக்கையில்  எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 13, 2025

தூத்துக்குடியில் வேகமாக பரவும் காய்ச்சல்

image

தூத்துக்குடியில் கடந்த ஒரு வார காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.பெரியவர்கள் சிறியவர்கள் குழந்தைகள் என இதில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 13, 2025

இலங்கைக்கு கடத்தவிருந்த புளி, சிகரெட், செட்டாப் பாக்ஸ் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியப்பட்டினத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதையில் போலீசார் நேற்றிரவு ரோந்தில் இருந்தனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 450 கிலோ புளி, மான்செஸ்டர் சிகரெட் வகைகள் மற்றும் சன் டிடிஎச் 295, Dish Tv Smart, 100 செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகுடன் தப்பிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

News February 13, 2025

தூத்துக்குடி பள்ளி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது

image

தூத்துக்குடி ரத்னபுரத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்(51) அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் இவரை போக்சோ வழக்கு ஒன்றில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பரிந்துரை பேரில் ஆரோக்கியராஜை குண்டர் சட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

News February 12, 2025

தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்

image

 தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தூத்துக்குடி கோட்டத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மதுரை திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று செய்து வந்த சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

News February 12, 2025

குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி 

image

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த சுரேஷ்ராஜ் மோத்தா (33), தனியார் இறால் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அந்த கம்பெனிக்கு கேரளாவைச் சேர்ந்த அப்துல் என்பவர் குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் அப்துல் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.

error: Content is protected !!