India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் ரூ.20 கோடியே 50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நிர்வாக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன முறை வரிசை ஆகிய திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 17-ஆம் தேதி காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (15.02.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் இவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை – திருச்செந்தூர் இடையேயுள்ள 6 ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணி முன்மொழியப்பட்டு வரும் 17ந் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தென்னக ரயில்வேயின் பொறியாளர் பிரிவு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
சாத்தான்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கல்லூரி முதல்வராக ஜேசு லிவிங்ஸ்டன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று(பிப்.15) மாலை அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாழைத்தோட்டம் என்ற பகுதியின் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். மேலும் எதிர் திசையில் வந்த மற்றொருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் உள்ளது. தூத்துக்குடி கடற்கரை மிகப்பெரும் காடாக இருந்ததாம். இந்த பகுதியில் ராமன் தவம் செய்தபோது, கடலலைகளின் பேரிசைச்சல் இடையூறாக இருக்க ராமன் அலைகளை சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில் கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் திருமந்திரநகர் என பெயர் வந்துவிட்டதாக ஒரு தகவல் சுற்றிவருகின்றது.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மண்ணை பூர்வீகமாக கொண்டவருமான நல்லகண்ணுவை மஹாராஷ்ட்ரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் வினோஜ் செல்வம் ஆகியோருடன் தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தூத்துக்குடி அருகே முனியசாமி நகர் பகுதியை சேர்ந்த ராஜாவுக்கும், அவரது எதிர் வீட்டைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பதில் பிரச்னை இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சுரேஷ் அரிவாளால் ராஜாவின் தலையில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷை தப்பிய தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது செய்முறை பயிற்சி முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாளை 15ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் நாளை எந்தவித மின்தடையும் இருக்காது என மின்வாரியம் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தின் அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியில், அந்த சுங்க சாவடி அமைக்கப்பட்டது முதல் தற்போது வரை மொத்தமாக எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? என தூத்துக்குடி எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இதுவரை 219 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் இதற்கு ரூபாய் 568 கோடி செலவானதாகவும்” தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் அடுக்குத் திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணிக்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தங்களுடைய பட்டா ஆதார் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனையும், முகாம்களுக்கு கொண்டு சென்று தங்களின் நில உடமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி நேற்றைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.