India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பட்டிக்கு ஹாக்கி பட்டி என்ற பெயரும் உண்டு. இங்கு பிரதான விளையாட்டு ஹாக்கி. 1952ல் இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் ஜன்த் இங்கு வந்து ஹாக்கி பயிற்சியளித்துள்ளார். இவ்வூரைச் சேர்ந்த கார்த்திக், மாரீஸ்வரன் ஆகியோர் இந்திய சீனியர் ஹாக்கி அணியில் உள்ளனர். கோவில்பட்டிக்கும் ஹாக்கிக்கும் உள்ள தொடர்பு காரணமாக 2017 இல் சர்வதேச தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. *புது தகவல்னா ஷேர் பண்ணுங்க*
தமிழக அரசு வேலைநாடும் இளைஞர்களுக்காக தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தை துவங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த இணையதளத்தில் இதுவரை 214 தனியார் துறை 1786 பேர் தேவை என உள்ளீடு செய்துள்ளது. எனவே இது சம்பந்தமாக மேலும் விவரங்களை அறிய தூத்துக்குடி தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை 9677734590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.*வேலைத்தேடும் நண்பர்களுக்கு பகிரவும்*
தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 20 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 25 இடங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணி காலை 6 முதல் 9 மணி வரை நடைபெறும். பங்கேற்க விருப்பமுள்ளோர் வனச்சரக அலுவலரை 95974 77906 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்ப்பதிவு செய்யலாம். பங்கேற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். SHARE IT.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. mஅப்போது அங்குள்ள வடக்கு தெருவில் ஒரு இடத்தில் 1400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த கணேசன், முத்தரசன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆயவு மையம் கணித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.
தூத்துக்குடி VOC துறைமுகத்தில் Chief General Manager பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 1 காலியிடம் இந்த வேலைக்கு இருக்கிறது. இங்கு <
பொது விநியோகத் திட்டத்தின் குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்க மாதம் தோறும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து நடைபெறுகிறது. அந்தவகையில், தூத்துக்குடியில் மாவட்ட பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் 8ம் தேதி தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டை கோருதல், நீக்கம், போன்றவைகளுக்கு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.07) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணியளவில் திருச்செந்தூர் தெய்வா திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, 11 மணிக்கு நா.முத்தையாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு, 11.30 க்கு உடன்குடியில் சமுதாய வளைகாப்பிலும் பங்கேற்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. முனீஸ்வரன் என்பவர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 5¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 யும், மகேஷ் கண்ணனிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ரூ.15,000 மீட்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.