Tuticorin

News March 9, 2025

தூத்துக்குடியில் அணுகழிவு இல்லை; எஸ்.பி எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவுகள் கொட்டப்படுவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு அணு உலையும் இல்லை; எங்கும் அணுக்கழிவுகளும் கொட்டப்படவில்லை; இவ்வாறு பொது அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என எஸ்பி அலுவலக செய்தி குறிப்பில்  நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*

News March 8, 2025

தூத்துக்குடியில் பெண்களை போற்றும் ஊர்! தெரிஞ்சிக்கோங்க

image

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தலில் நன்குடி வேளாளர் சமூகத்தினர் உள்ளனர். இங்கு குழந்தை பிறந்தால் குலவை சத்தமிடுவர். பெண் குழந்தை பிறந்தால் அதிக குரல் எழுப்பி குலவை சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அரசு பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே இவர்கள் பெண்களுக்கு சம பங்கு சொத்து வழங்கி வருகின்றனர். கோவில் வரி, வீட்டு வரி எல்லாமே பெண்கள் பெயரில்தான்.*புதுசுனா ஷேர் பன்னுங்க*

News March 8, 2025

தென்னகத்து சார்லி சாப்ளினின் நினைவு தினம்

image

“தென்னகத்து சார்லி சாப்ளின்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சந்திரபாபு வின் நினைவு தினம் இன்று (மார்ச்.08). தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில், சிறந்த பாடகர்களில் ஒருவராக விளங்கியவர். தூத்துக்குடி மண்ணில் பிறந்த நடிகர் சந்திரபாபு வின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

News March 8, 2025

தூத்துக்குடி :மானிய எரிவாயு திட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெற்றவர்கள் முதல் சிலிண்டருக்கு பின் மாற்று சிலிண்டர்கள் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு எரிவாயு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் பயனாளிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்களது விவரங்களை முகவர்களிடம் புதுப்பிக்க வேண்டும். தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

தூத்துக்குடி: நில அளவீடு செய்ய இணையத்தில் விண்ணபிக்கலாம்

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்தனர். இந்நிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் <>இந்த <<>>கிளிக் செய்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News March 8, 2025

தூத்துக்குடியில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

தூத்துக்குடியில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.

News March 8, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற 11 ஆம் தேதி கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மட்டுமல்லாமல் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் ராம்நாடு ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 11-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அன்றைய தினம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்*

News March 7, 2025

தூத்துக்குடியில் உள்ள ஹாக்கிபட்டி! தெரிஞ்சிக்கோங்க

image

கோவில்பட்டிக்கு ஹாக்கி பட்டி என்ற பெயரும் உண்டு. இங்கு பிரதான விளையாட்டு ஹாக்கி. 1952ல் இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் ஜன்த் இங்கு வந்து ஹாக்கி பயிற்சியளித்துள்ளார். இவ்வூரைச் சேர்ந்த கார்த்திக், மாரீஸ்வரன் ஆகியோர் இந்திய சீனியர் ஹாக்கி அணியில் உள்ளனர். கோவில்பட்டிக்கும் ஹாக்கிக்கும் உள்ள தொடர்பு காரணமாக 2017 இல் சர்வதேச தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. *புது தகவல்னா ஷேர் பண்ணுங்க*

News March 7, 2025

தூத்துக்குடி இளைஞர்களே வேலை வேண்டுமா?

image

தமிழக அரசு வேலைநாடும் இளைஞர்களுக்காக தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தை துவங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த இணையதளத்தில் இதுவரை 214 தனியார் துறை 1786 பேர் தேவை என உள்ளீடு செய்துள்ளது. எனவே இது சம்பந்தமாக மேலும் விவரங்களை அறிய தூத்துக்குடி தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை 9677734590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.*வேலைத்தேடும் நண்பர்களுக்கு பகிரவும்*

News March 7, 2025

தூத்துக்குடி: பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

image

தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 20 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 25 இடங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணி காலை 6 முதல் 9 மணி வரை நடைபெறும். பங்கேற்க விருப்பமுள்ளோர் வனச்சரக அலுவலரை 95974 77906 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்ப்பதிவு செய்யலாம். பங்கேற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். SHARE IT.

error: Content is protected !!