Tuticorin

News March 10, 2025

தூத்துக்குடி மக்களே 2 நாட்கள் கவனமாக இருங்கள்

image

தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் “இன்றும் (11) நாளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது; எனவே இந்த 2 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம்; நீர்நிலைகள் அருகே தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்; மேலும் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 10, 2025

தூத்துக்குடி விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வரும் மார்ச் 30-ம் தேதி முதல் ஒரு நாளைக்கு தினமும் 2 முறை சென்னை – தூத்துக்குடி என சேவைகளை தொடங்க உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் மொத்தம் 7 விமானங்கள் தினசரியாக இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.*விமானத்தில் செல்லும் நண்பர்களுக்கு பகிரவும்*

News March 10, 2025

ஒன்றரை லட்சம் பேர் விருந்து சாப்பிடும் ஆலயம்

image

உடன்குடி அருகே மெஞ்ஞானபுரத்தில் உள்ளது தூய பவுலின் ஆலயம். கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த ஆலயத்தின் மிக நேர்த்தியாக கட்டப்பட்ட 192 அடி உயர கோபுரம் 1868 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மிகவும் புகழ்மிக்க இந்த ஆலயத்தின் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி வியாழன் அன்று மாபெரும் அசன விருந்து பண்டிகை நடைபெறும். இதில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்.

News March 10, 2025

பள்ளி மாணவனுக்கு வெட்டு – 3 இளம் சிறார்கள் கைது

image

ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள்புரம் பகுதியில் தேவேந்திரன் (17) என்ற மாணவன் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சேரகுளம் போலீசார் வழக்குப் பதிந்து 17 வயது மதிக்கத்தக்க 3 இளஞ்சீறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 10, 2025

தூத்துக்குடி அருகே 300 ஆவது நாள் போராட்டம்

image

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள பொட்டலூரணியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுமீன் நிறுவனங்களை மூடிவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (10.03.2025) 300 ஆவது நாளை முன்னிட்டு கூட்டம் நடைபெற உள்ளது என போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதில் பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

News March 9, 2025

அடுத்த வாரத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் அடுத்த வாரம் மார்ச்.15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மார்ச் 8, 9 தேதிகளில் ஈரநிலப் பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. இயற்கை ஆர்வலர்கள், பறவை கண்காணிப்பாளர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

News March 9, 2025

தூத்துக்குடி மக்களை கவர்ந்த பொறித்த பரோட்டா

image

தூத்துக்குடியில் அனைவருக்கும் பிடித்தமான உணவில் கண்டிப்பாக பொறித்த பரோட்டா வரும். இங்கு வீதிக்கு வீதி பொறித்த பரோட்டா கடை உண்டு. இந்த பரோட்டாவிற்கென தயாரிக்கும் சால்னா அனைவரின் நாவையும் கட்டுப்படுத்தி வைக்கும். 3 வகையான சால்னா, வெங்காயம் தான் பொறித்த பரோட்டாவிற்கு செம்ம காம்பினேசன். சில கடைகளில் கொடுக்கப்படும் பீப் சால்னா அல்டிமேட் தான். *பொறித்த பரோட்டா சாப்பிடாத நண்பருக்கு பகிரவும்*

News March 9, 2025

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றம்- ரூ-6 கோடிக்கு தீர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய மொத்தம் 13 அமர்வுகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று (மார்ச்-08) நடைபெற்றது. மாவட்ட நீதிபதி வசந்தி தலைமையில் நடைபெற்ற இதில் மொத்தம் 3252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக மொத்தம் ரூபாய் 6 கோடியே 62 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

News March 9, 2025

தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீதுகடும் நடவடிக்கை 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News March 9, 2025

80 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற சிறிய ரக கப்பலில் ரூ.80 கோடி மதிப்புள்ள 30 கிலோ ஹசீஸ் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் மற்றும் குற்ற புலனாய்வுத்துறையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்து , 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!