India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியில் புகழ்பெற்ற முத்துமாலை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே கோவில் வீடு ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமைகளில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வருவர். கோவில் பூசாரி அவர்கள் மீது பூஜை செய்த தாமிரபரணி ஆற்று தீர்த்தத்தை தெளிப்பார். பின்னர் அங்கு சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை ஓலை பட்டையில் படைப்பார். இதை சாப்பிட்டால் நோய் தீரும் என்பது ஐதீகம். *நண்பர்களுக்கு பகிரவும்*
டெல்லியில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சோலை ராஜ் நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், முத்து மீனா T-20 பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
உலக காசநோய் விழிப்புணர்வு தினம் இன்று(மார்ச் 23) கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பள்ளியில் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், அனைவரும் காச நோய்க்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மருத்துவர்கள் காசநோய் தடுப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் உள்ள அடையாளம் காணப்பட்ட இடங்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அகழாய்வு செய்ய வேண்டும். இந்திய பன்முகத்தன்மை கொண்ட உண்மையான வரலாற்றை அறிய அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டியது காலத்தில் கட்டாயம் என, நெல்லையில் நடைபெற்ற பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு சார்பிலான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மறைந்த நடிகர் எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் 1973ஆம் ஆண்டு வெளியானது. தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் நேற்று(மார்ச் 23) ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை எஸ்.பி அலுவலகம் வெளியிட்டுள்ளது.*இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிர்ந்து உதவவும்*
தூத்துக்குடியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது முயல் தீவு. கடலுக்கு நடவே அமைந்துள்ள இந்த தீவு கொள்ளை அழகு என போய் வந்தவர்கள் கூறுகிறார்கள். கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பான உறைவிடமாக காணப்படும் முயல் தீவு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பொங்கலுக்கு மறுநாள் நாள் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. குடும்பத்தினருடன் சென்றால் நிச்சயம் மகிழ்ச்சியாய் இருக்கலாம். *நண்பர்களுக்கும் பகிரவும்*
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து கடந்த மாதம் கணினி பட்டா இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு முதல் தவணையாக 150 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பட்டாக்களை பயனாளிகளிடம் வழங்கினார்.
துாத்துக்குடி, மேலசண்முகபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த, அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்து, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து சட்டங்களை மீறாமல் விழிப்புணர்வுடன் செயல்பட மாணவர்களுக்கு பகிருங்கள்
Sorry, no posts matched your criteria.