India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கினை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மலர்த்தேன், மலைத்தேன், கொம்புத் தேன் கேள்விபட்டிருப்பீர்கள். மூலிகைத் தேன் கேள்வி பட்டிருக்கிறீர்களா?. நம்ம தூத்துக்குடி, சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் முடக்கத்தான் கொடி பூக்களிலிருந்து தேன் உற்பத்தி செய்து செம லாபம் பார்த்து வருகிறார். தேனே ஆரோக்கியம் மூலிகைத் தேன் சொல்லவா வேணும். இந்த மாதிரி புதுசா யோசிச்சு நீங்களும் பெரிய ஆளா வாங்க மக்களே. யூஸ் புல் தகவல்னா நண்பர்களுக்கும் பகிரவும்
மகாபலிபுரம் கோவளம் கடற்கரையை தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தூத்துக்குடி, முள்ளக்காட்டில் உள்ள கோவளம் கடற்கரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிக அழகிய அமைதியான கடல். கடலின் குளிர்ந்த காற்று தாலாட்டும். இதனால் தான் இந்த கடற்கரையை சுற்றுலா தளமாக மாற்றவும் கடல் நீர் சருக்கு விளையாட்டுக்கான இடமாகவும் அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஒருமுறை வந்து பாருங்கள் மறக்க மாட்டீர்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின் கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’ என அழைக்கப் பெற்றது. ஷேர் பண்ணவும்
இன்று(மார்ச் 26) முதல் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அடுத்த 1 வாரத்திற்கு வெப்பநிலை அதிகரித்தே காணப்படும். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வரும் நாட்களில் 100°F-க்கு மேல் வெப்பநிலை பதிவாகும். இந்த நிலை மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். ஏப்.1 முதல் வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே தாக்குதலுக்குள்ளான 11ஆம் வகுப்பு மாணவரின் தந்தையாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்தும், அரசின் நடவடிக்கைகள் குறித்தும், அடுத்தக்கட்ட தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சந்தித்து பேசினர். அப்போது, “பாதிக்கப்பட்ட எங்களை இதுவரை தூத்துக்குடி மாவட்ட எம்எல்ஏக்களோ, எம்பிக்களோ, அமைச்சர்களோ யாரும் சந்திக்கவில்லை” எனக்கூறி மாணவரின் தந்தை வருத்தம் தெரிவித்தார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் முதல் குற்றவாளியாக கருதப்படும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று(மார்ச் 26) விசாரணைக்கு வருகிறது. 2020 ஜூன் 20 அன்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
எட்டையாபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை நேற்று(மார்ச் 25) திடீரென இடிந்து விழுந்தது. இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையினால் வீடு இடிந்துள்ளதாகவும் இது சம்பந்தமாக பொறியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தவர், பாரதியார் இல்லம் சீரமைக்கப்படும் வரை சுற்றுலாப் பயணிகள் இங்கு வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.