India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் இரவு காவலர், தோட்டக்காரர், துப்புரவாளர், ஸ்கேலஞ்சர் போன்ற 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு பதிவு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் கருவாட்டு குடோன் ஒன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக விராலி மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று சோதனை செய்தபோது பாலித்தீன் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2.4 டன் விராலி மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். தற்போது உள்ள சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் வரை செல்போன்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், இதன் மூலம் மோசடியில் சிக்கிவிடாமல் இருக்க எச்சரித்துள்ளனர். தங்கள் கடவு சொல்லை எப்போதும் பாதுகாப்பாகவும் உறுதியானதாகவும் வைத்திருங்கள் என்று இன்றைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குதல் அடிக்கடி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் நேற்று திடீரென்று கடல் 80 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருப்பினும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர், இதனை அடுத்து மாலை மீண்டும் கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவை இணைந்து மாதம் தோறும் சிறிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் கே ஏ எஸ் மணிமாறன், தின பூமி நாளிதழின் அதிபராக இருந்து வருகிறார். இன்று இவர் காரில் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த பொழுது கார் ஒன்று மோதியதில் பலியானார். காரை ஓட்டி வந்த இவரது மகன் சதீஷ் தலையில் பலத்த காயம் அடைந்தார். இது பற்றி நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூபாய் 68.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகம் மற்றும் நீரேற்று நிலையம் போன்ற நான்கு முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
தீப்பெட்டி உற்பத்தி தொழிலை பாதிக்கும் சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு நேற்று சீன லைட்டர் உறுதி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எம்.பி கனிமொழி நாளை (14) மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை 9 மணிக்கு ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்குகிறார். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அண்ணா ராஜ் (37) மற்றும் இக்பால் (30) இருவரும் ரவுடிகள் பட்டியலில் கண்காணிக்கப்பட்டு வருபவர்கள். இந்நிலையில் இருவரும் ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.