Tuticorin

News October 17, 2024

தூத்துக்குடியில் பேரிடர் கால அவசர எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட பேரிடர் துறை சார்பில், பேரிடர் மற்றும் இயற்கை இடர்பாடுகள் பற்றி புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொலைபேசி எண் 0461-2340201, அலைபேசி 94864654714 மற்றும் டோல் ஃப்ரீ எண் 1077 ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.

News October 17, 2024

சிவன் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

image

தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம் பிரியாள் அம்மாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வரும் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 27ஆம் தேதியும், திருக்கல்யாணம் 29ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

News October 17, 2024

தூத்துக்குடியில் இரவு ரோந்துப்பணி அதிகாரிகள் 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (அக்.16) இரவு ரோந்து பணிகளுக்கு இரவு நேர போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர காலத் எண் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் எண் 95141 44100 ஆகிய எண்ணைகளையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

உமர் அப்துல்லா தூத்துக்குடி எம்பி நேரில் வாழ்த்து

image

தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஜே.கே.என்.சி கட்சியின் தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லாவை சந்தித்தார். மேலும் ஸ்ரீநகரில் புதிய முதல்வராக பதவியேற்கும் உமர் அப்துல்லாவையும் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சி தலைவர் கலந்து கொண்டனர்.

News October 16, 2024

புத்தகக் கண்காட்சியை 90 ஆயிரம் மாணவர்கள் பார்வை

image

தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தகத் திருவிழா கடத்த மூன்றாம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த புத்தக கண்காட்சியை 90 ஆயிரம் மாணவர்கள் உட்பட மொத்தம் 1.40 பேர் பார்வையிட்டுள்ளனர். புத்தக கண்காட்சியில் மொத்தம் ஒரு கோடியே 25 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

மனைவியை திட்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை

image

ஸ்ரீவைகுண்டம் ராஜபதியைச் சேர்ந்த பரிசுத்த ராஜ் சண்முகத்தாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துவிட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது சம்பந்தமாக கேள்வி கேட்ட சண்முகத்தாயை பரிசுத்த ராஜமும் அவர் குடும்பத்தினரும் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டி உள்ளனர். இந்த வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் பரிசுத்தராஜ் உட்பட குடும்பத்தினர் ஐந்து பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

News October 15, 2024

தூத்துக்குடி ரோந்து பணி காவலர்கள் எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (அக்16) இரவு 10 மணி முதல் நாள் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகளுக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் எண் 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

முக்காணி இளைஞரின் புகைப்படம் தேர்வு

image

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் புகைப்பட போட்டி நடந்தது. இந்த போட்டியில் பலரது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் முக்காணியை சேர்ந்த அஜித் என்பவரின் புகைப்படங்கள் சிறந்த 10 புகைப்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான சான்றிதழை கனிமொழி எம்பி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News October 15, 2024

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை களையும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும். அதன்படி, இந்த மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் வரும் 19ஆம் தேதி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

தூத்துக்குடி எஸ்பி, டிஎஸ்பிக்கு பாராட்டு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் அவர் தலைமையிலான போலீசாருக்கு காவல் துறை துணை தலைவர் மூர்த்தி இன்று பாராட்டு தெரிவித்தார். இதில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

error: Content is protected !!