Tuticorin

News May 11, 2024

தூத்துக்குடியில் கன மழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(மே.11) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை காலமாக இருந்தாலும் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிது குறிப்பிடத்தக்கது.

News May 11, 2024

ஆறுமுகநேரி அருகே நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம்?

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கமலாவதி பள்ளியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதில் தேர்வு எழுதிய 350 மாணவர்களுக்கும் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மறு தேர்வு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 11, 2024

மாரி செல்வராஜின் படம் தூத்துக்குடியை சார்ந்ததா?

image

இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது ‘பைசன் காளமாடன்’ என்ற தலைப்பில் புதிய படத்தை எடுத்து வருகிறார். இந்த படம், தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் இவர் 1995ல் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் ஆவார்.

News May 10, 2024

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த முன்னாள் அமைச்சர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாய கடனை பெற்றுள்ளனர். இந்த நிலையில் அந்த விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வங்கி நிர்வாகம் அடாவடியாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

News May 10, 2024

பல்வேறு பாடங்கள் 709 மாணவர்கள் சென்டம்

image

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கிலத்தில் ஒரு மாணவரும் ,கணிதத்தில் 453 மாணவர்களும் , அறிவியலில் 140 மாணவர்களும் ,சமூக அறிவியலில் 115 மாணவர்களும் என மொத்தம் 709 மாணவர்கள் இந்தப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

News May 10, 2024

சாத்தான்குளம்: மே 12ல் இலவச மருத்துவ முகாம்

image

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில்  மே 12ஆம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் வலிப்பு நோய், பக்கவாதம், நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

News May 10, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே உள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் மந்திரமூர்த்தி (66). ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் வாகைகுளம் டோல்கேட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் பைக் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 10, 2024

தூத்துக்குடி 12ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.09% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.62 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.55- சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று தூத்துக்குடி மாவட்டம் 12ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 94.39 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 94.39 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.56 .% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.03 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.