India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1312 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இ சேவை மையங்கள் மூலம் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் உயர் கல்விக்கு செல்வதற்கு வசதியாக சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சியாக பனை ஓலையில் இருந்து வாழ்த்து அட்டை மற்றும் படங்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் போதகர் ஆர்ட்ஸ் அண்ட் சாமுவேல் இந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்தார்.
தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது மீனவரின் வலையில் அரியவகை மீன் ஒன்று கிடந்தது. இதனை ஆய்வுக்காக அனுப்பிய அதிகாரிகள் தற்போது அதன் ஆய்வு முடிவு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த மீன் அரியவகை “கான்கிரீட் ஈல் ” இனத்தைச் சேர்ந்த மீன் என தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இளம் மாணவர் விஞ்ஞானி திட்ட சிறப்பு முகாம் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முகாமில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் மழை நீர் உடனடியாக வடியும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபெற்ற ஏசியன் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி கவுசிகா வெற்றி பெற்று பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள ஸ்குவாஸ் ஏசியன் ஜூனியர் தனி நபர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து மாணவி கௌசிகா நேற்று(மே 14) தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி அருகே உள்ள மங்களகிரி சேர்ந்தவர் பிரேம்குமார் (30). ஷிப்பிங் கம்பெனி ஊழியர்
இன்று பிற்பகல் இவர் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது
பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இறந்தார். இது பற்றி புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் உள்நாட்டு செவிலியர்கள் தங்களது பெயர் விவரங்களை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பகுதி சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மாணவர் சேர்க்கையில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.