Tuticorin

News December 17, 2024

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 20 அன்று காலை 10:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் <>www.tnprivatejobs.tn.gov.in/<<>> என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று(டிச.,16) தெரிவித்துள்ளார். SHARE IT.

News December 16, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயர் பட்டியலை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்குறிப்பிட்ட எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.

News December 16, 2024

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று(டிச.16) ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக வரும் டிச.,18ல் பெங்களூரில் நடைபெறும் திறன் பயிற்சியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

News December 16, 2024

நூறு இடங்களில் மட்டுமே தண்ணீர் தேக்கம் -ஆட்சியர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக கடந்த 14ஆம் தேதி 474 தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. உடனடியாக அவைகளை வடிய வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நேற்று 292 இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி இருந்தன. இன்று 100க்கும் குறைவான இடங்களிலேயே தண்ணீர் தேங்கியுள்ளன. அவைகளும் அகற்ற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை திடீர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையினால் சாலைகளில் குழிகள் உருவாகியுள்ளன. இந்தக் குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கண்களுக்கு குழிகள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மழைநீர் தேங்கிய சாலைகளில் செல்லும் போது மிகவும் நிதானமாக செல்லுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 16, 2024

தூத்துக்குடி: 555 குடும்பங்களை சேர்ந்தோரை மீட்ட போலீசார்!

image

தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் மீட்பு படையினர் ஈடுபட்டனர். அந்த வகையில் முறப்பநாடு, முத்தையாபுரம், புதுக்கோட்டை, ஆத்தூர், ஏரல் போன்ற பகுதிகளில் 555 குடும்பங்களை சேர்ந்த 1058 பேரை போலீஸ் மீட்பு படை மீட்டு நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளதாக எஸ்பி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2024

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த தூத்துக்குடி நிர்வாகி

image

மோடியைப் பார்த்து ஒரு கண்டனம் தெரிவிக்க முடியாத நீங்கள், திமுக ஆட்சியைப் பற்றி விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? உங்கள் பொதுக்குழு தீர்மானங்கள் பாஜக உடனான உங்கள் தொடர்பை வெளிப்படையாக்கி விட்டன என தூத்துக்குடியை சேர்ந்த திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

News December 16, 2024

எட்டயபுரம் சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – சுந்தரி தம்பதியினர் நேற்று (15-ம் தேதி) சிந்தலக்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து வந்த கார் அவர்கள் மீது வேகமாக மோதியதில் தம்பதிகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 15, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகள் நியமன விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (15.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம், கோவில்பட்டி, மணியாச்சி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மைச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!