India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி, புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் மாரியப்பன் இன்று பணியில் இருந்தபோது அருகில் ஜன்னல் ஓரத்தில் இருந்த பீரோவில் மேல் பகுதியில் இருந்த பாம்பு ஒன்று, மாரியப்பன் மேல் விழுந்தது மட்டுமின்றி அவரது வலது கையின் கட்ட விரலை கடித்துள்ளது. இதனால் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.

1. தூத்துக்குடி – 0461-2321448
2. ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
3. திருச்செந்தூர் – 04639-242229
4. சாத்தான்குளம் – 04639-266235
5. கோவில்பட்டி – 04632-220272
6. ஓட்டப்பிடாரம் – 0461-2366233
7. எட்டயபுரம் – 04632-271300
8. விளாத்திகுளம் – 04638-233126
9. கயத்தார் – 04632 -261906
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பம் உள்ள தகுதியான இளைஞர்கள் இத்தகைய பயிற்சிகள் பெற்று பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் இருந்து கடம்பூர் செல்லும் ரயில் பாதையில் நேற்று இரவு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு ரயில் பாதையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இவர் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் அடிபட்டதாக தெரிகிறது. இது சம்பந்தமாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <

திருச்செந்தூர் – ஆறுமுகனேரிக்கு வாடகை கார் ஒன்றை(பிப்.7) 4 பேர் அழைத்துள்ளனர். பின்னர் ஓட்டுநர் வேல்குமார்(55) என்பவரை, சீனந்தோப்பு அருகே காரை நிறுத்த கூறி, கைப்பேசி, ரூ.5000, 4 கி தங்க மோதிரத்தை பறித்துவிட்டு தப்பினர். போலீசார் சிசிடிவி மூலம் விசாரித்து, உவரியில் கலையரசன்(23), முத்துக்குமார்(19) ஆகியோரை கைது செய்து சிறை அடைத்தனர். பணம், மோதிரம் மீட்கப்பட்டது. தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி மது விலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த பாலா மற்றும் காளீஸ்வரன் 1 1/2 கிலோ கஞ்சா வைத்து இருப்பது தெரிந்தது. இந்நிலையில் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.
Sorry, no posts matched your criteria.