India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று(டிச.,20) வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 29ஆம் தேதி தூத்துக்குடி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வர உள்ளார். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்துவதற்காக தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.20) மாவட்ட ஆட்சியர் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிலுவை பத்திகளை நீக்கம் செய்வது தொடர்பான 43வது உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி இயக்குனர் மற்றும் உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் துறைமுகத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்ட ஆய்வுக் கூட்டம் இன்று(டிச.20) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொண்டு தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். உடன், பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு மேல்குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
விளாத்திக்குளம், அயன்பொம்மலாபுரத்தைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரை, கடந்த நவம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் குஜராத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து மாயமானார். இதனையடுத்து தூத்துக்குடி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் முயற்சி எடுத்ததன் பேரில் கேரளா நிறுவனம் ரூபாய் 6 லட்சம் வழங்கியுள்ளது. இதனை சிஐடியு தொழிற்சங்கத்தினர் மீனவர் அண்ணாதுரை குடும்பத்தினரிடம் வழங்கினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் 12.500 மெட்ரிக் டன், சோளம் 2.12 மெட்ரிக் டன், உளுந்து 18.228 மெட்ரிக் டன், கம்பு 7.537 மெட்ரிக் டன், பாசிப்பயிறு ஒரு மெட்ரிக் டன், நிலக்கடலை 5.525 மெட்ரிக் டன் இடுபொருள்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் மழையின் காரணமாக 12.12.2024 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்திடும் பொருட்டு நாளை 21.11.2024 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் எனத் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதற்கான சுற்றறிக்கையை பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. SHARE IT
முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தேம்பாவணி. லோடுமேன் .கடந்த இரு நாட்களுக்கு முன்பு இவர் அங்குள்ள கோவில் அருகே படுத்து தூங்கும் பொழுது இவரை சிலர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் & ரூபன் ராஜ் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில், கடல் சாகச விளையாட்டு மையம் அமைக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் தூத்துக்குடி கோவளம் கடற்கரை பகுதியை வெளிநாட்டு சுற்றுலாத் தலம் போல் மாற்றும் வகையில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் அமைக்க சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடந்தது
Sorry, no posts matched your criteria.