India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க வயது வரம்பு 30-லிருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 19 பிப்ரவரி மாலை 5.45 மணிக்குள் thoothukudi.nic.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பெற்று, மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <

தூத்துக்குடி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <

தூத்துக்குடி மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். எனவே இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை மறுநாள் (பிப்.19) வியாழக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்..

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த மீனவரான ஜான்சன், நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க முயன்றனர். ஜான்சன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் சூழலில், இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் பிப்.21 ம் தேதி கனமழை பெய்ய கூடும். மறுநாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT..

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.