India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இன்று வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அமைச்சர் தலைமையில் இன்று & நாளை பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் சாம்பல் புதன் வழிபாட்டையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக பனிமய மாதா, திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. 272 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் எட்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை – தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. சென்னை தூத்துக்குடி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் பயனிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

மாவட்ட அளவிலான உதவி மையம்: 7402908492
தூத்துக்குடி : 7402608553
கோவில்பட்டி : 7405608567
கருங்குளம் : 7402608555
திருவைகுண்டம் : 7402608557
ஆழ்வார்திருநகரி : 7402608559
உடன்குடி : 7402608563
திருச்செந்தூர் : 7402608561
சாத்தான்குளம் : 7402608565
கயத்தாறு : 7402608569
ஓட்டப்பிடாரம் : 7402608571
விளாத்திகுளம் : 7402608573
புதூர் : 7402608575

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினமே மதுபான கடைகளில் கூட்டம் குவிந்தது.

இன்று 18.02.26 மாவட்ட ஆட்சித்தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கொள்வார். அன்றைய இரவு
அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 19.02.2026 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தூய்மை போக்குவரத்து மற்றும் மாண்புமிகு முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளை பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (44) என்பவர் தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பூட்டி கிடந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கயத்தாறில் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு வசித்து வருபவர் இசக்கிராஜா(27) கூலித்தொழிலாளி, மனைவி இசக்கியம்மாள்(26), வீட்டில் தனியாக இருந்து மாவரைத்து கொண்டு இருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மகாராஜன்(50) குடிபோதையில் இளம் பெண்னை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
Sorry, no posts matched your criteria.