India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று(டிச.22) தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான பொங்கல் (ஜன 15,16) நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராசிரியர் தகுதித் தேர்வு (NET) நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார், தமிழ்நாட்டின் பண்பாடு என எதையும் மதிக்காத பாஜக அரசு உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இல்லத்துப்பிள்ளைமார் சமுதாய சங்கத்தின் தேர்தல் கடந்த டிச.15ஆம் தேதி நடந்தது. இதில் தலைவராக சங்கரன், செயலாளராக முருகன், பொருளாளராக பழனி மாரியப்பன் உள்பட நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை தேர்தல் அலுவலர்கள் சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று(டிச.22) வழங்கினர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
வருகின்ற 29 ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடி வருகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று மாலை முத்தையாபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள டைட்டில் பார்க்கை திறந்து வைக்கிறார். பின் மாணிக்க மஹாலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மறுநாள் காலை காமராஜ் கல்லூரி மைதானத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை துவங்கியுள்ளனர். இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் சாதகமான நீர் இருப்பை கருத்தில் கொண்டு 3 மற்றும் 4 வது ரீச் களில் நாளை(டிச.23) தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரத்து 18 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதனால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை பதிவு ஒன்றை ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது அதில் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு பொதுமக்கள் தகவல்கள் திருடப்படுகின்ற புதிய அபாயம் நடைபெற்று வருகிறதென்று குறிப்பிட்டுள்ளார்கள் மற்றும் அறிமுகமில்லாத தளத்தின் லிங்கினுள் சென்று சுயவிவரங்களை கொடுக்க வேண்டாம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
*ஷேர்*
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி கோட்டத்தில் 35 அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு சிறப்பு ஏற்பாடாக அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் வரும் டிச.24 (திங்கள்கிழமை) முதல் டிச.28 (சனிக்கிழமை) வரை காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் பயன்பெற இன்று அழைப்பு விடுத்தனர்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வருவதையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடிக்கு வரும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் வழக்கமாக ரூ.4,796 இருந்த நிலையில் இன்று(டிச.,21) ரூ.14,281 ஆக உயர்வடைந்துள்ளது.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படும். எனவே இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பங்கேற்குமாறு வேளாண் துறை இணை இயக்குநர் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, குளத்தூர் முத்துக்குமாரபுரம் விளக்கு அருகே எதிரே வந்த லோடு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோடுவேன் ஓட்டுநர் பாறைக்குளம் பகுதியை சேர்ந்த செல்வம்(40) மற்றும் பேருந்து ஓட்டுநர் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ராஜாராம்(45) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.