India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு உருவாக்கிய காவல் உதவி செயலி, 60-க்கும் மேற்பட்ட அம்சங்களுடன், அவசர காலங்களில் பெண்கள், மாணவிகள், முதியோர் பாதுகாப்பிற்கு உதவுகிறது. இதில் “அவசரம்” பொத்தானை அழுத்தி தகவல், இருப்பிடம், வீடியோ பகிரலாம். வாட்ஸ் அப், கூகுள் மேப் மூலம் உறவினருடன் இடம் பகிர முடியும். செயலியை Google Play Store-ல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தி.மலை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் முன்முயற்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு TNPSC குரூப்-2, 2A தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். 21-32 வயதுடைய பட்டதாரிகள் தகுதியுடையோர். விடுதி வசதியுடன், செலவுகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். பதிவு www.tahdco.com மூலம் செய்யலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்தார்.
சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை, சித்தாத்துரை, காட்டுதெள்ளூர், ரெட்டிபாளையம், அல்லியாளமங்கலம், பாடகம் ஆகிய வனப்பகுதிகள் அருகேயுள்ள விவசாயிகளுக்கு வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆத்துரை வனப்பகுதியில் இன்று தேடுதல் வேட்டை நடத்தப் போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், இலவச தங்கும் வசதி,பயிற்சிக் கட்டணத்துடன் தாட்கோ மூலம் அளிக்கப்படும் சர்வதேச விமானப் போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளை பெற விரும்பும் ஆதிதிராவிடா் & பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தி.மலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகுதியானோர் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அனைத்து இடங்களிலும் தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயரமுள்ள கம்பத்தில் தேசியக்கொடியானது அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு, அவருக்கு அஞ்சலியைக் குறிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழக அரசின் மாநில அளவிலான டாக்டர் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோ. கண்ணகி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அருகே வெங்களத்தூரில் 3 இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனம் பொக்லைன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லோகேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இன்பநாதன் (23), தமிழ்செல்வன் (24) ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசார
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 2025 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.இந்த முகாம்கள் முடியும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நிறுத்தப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம் நாளை 27-12-2024 காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை திருவண்ணாமலை, இனாம்காரியந்தல் கிராமத்தில் மல்லிகை நகர் ஆயுஷ் ஆயுர்வேத மையத்தில் நடைபெறுகிறது. வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26-12-2024) இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.