Tiruvannamalai

News March 19, 2025

தி.மலையில் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க. 

News March 19, 2025

8th Pass செய்த்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த <>விண்ணப்பத்தை<<>> பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும்.

News March 19, 2025

கழுத்தில் சேலை இறுகி மாணவன் பலி

image

ஆரணியை அடுத்த காமக்கூர் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் ஜெயராமன் (13), தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அவர்களுடைய கோழிப்பண்ணையில் உள்ள மரத்தில் சேலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென சேலை அவரது கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 19, 2025

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

image

சேத்துப்பட்டு அருகே உள்ள பெரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (48) என்ற விவசாயி. இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றது.

News March 19, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

தி.மலை கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை நமிதா

image

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு கடந்த சில தினங்களாகவே திரைப்பட நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலரும் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் வருகின்றனர். இன்று நடிகை நமிதா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களைகளையும் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கும் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை Share பண்ணுங்க

News March 18, 2025

பைனான்ஸ் ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

ஆரணி ஆரணி பாளையம் சந்தா தரவை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ரமேஷ் என்பவரை நேற்று ஆரணி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 17, 2025

பூங்காவில் சிறுத்தை கொண்டுவர திட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்துள்ள அமிர்தி வன உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது பூங்காவில் சிறுத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கூண்டு அமைக்க ரூ.25 லட்சம் நிதி கேட்கப்பட்டுள்ளது. முதலைகள், பாம்புகள், பறவை இனங்கள் கொண்டு வரவும் திட்டம் என வனத்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

News March 17, 2025

தி.மலை: செருப்பு மாலையுடன் முதியவர் தர்ணா போராட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் நாராயணசாமி. இவர், தென்னகரம் ஏரியிலிருந்து கீழ்பொத்தரை, மேப்பத்துறை வரை செல்லும் நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வலியுறுத்தி செருப்பு மாலையுடன் இன்று (17-03-2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!