India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை அன்று (24.09.2024) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. இதில் நுழைவு கட்டணமாக 100 ரூபாயும், முன்பணமாக இரு சக்கர வாகனத்திற்கு 1000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 2000 ரூபாயும் செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு 8870486926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாநகராட்சிக்குட்பட்ட செங்கம் சாலையில் சமுத்திரம் பகுதியில் எமலிங்கம் அருகே இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை சிறுபான்மையினர் நலன் & வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் & அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு ஊரக நகர வாழ்வாதார இயக்கம் இணைந்து அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நாளை நடத்துகின்றனர். இதில் 120க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 7000க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் செப்23ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 4ல் தொடங்கி 10 நாட்கள் கொண்ட விழா டிசம்பர் 13ம் தேதி மகா தீபத்திருவிழாவில் முடிவடைகிறது. எனவே இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் செப் 23ஆம் தேதி காலை 5.45 மணிக்கு நடைபெறும் எனவும், அதை தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏரியில் பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கண்ணமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில் அந்த பெண் காஞ்சீபுரத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் காஞ்சீபுரம் கம்பர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி அலமேலு(50) என்று போலீஸ் விசாரணையில் உறுதியானது.
சேத்துப்பட்டு அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி தலைமறைவான பகுதி நேர ஆசிரியர் தனக்கரசு(43) காவலர்களால் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கோபத்தில் ஆசிரியரை தாக்கினர். தனக்கரசு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆசிரியரை தாக்கிய 6 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சேதுபட்டு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு செய்தார். உடன் திருவண்ணாமலை வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், செய்யாறு கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
திமுக அரசு அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஆரணி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான அரசு பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏரிக்கரையில் இன்று காலை பெண் சிவனடியார் ஒருவர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்ததை கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் போலீசார் சம்பவம் இடம் விரைந்து அவரின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.