Tiruvannamalai

News July 29, 2024

போளூர் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் திறப்பு விழா

image

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் போளூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டு புதிய கட்டிடத்தை இன்று காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய அலுவலக கட்டிடத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து அலுவலகப் பணிகளை தொடங்கி வைத்தார்.

News July 29, 2024

திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

image

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(ஜூலை 29) சாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சமீபத்தில் இவர் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 28, 2024

மலை மீது ஆக்கிரமிப்பு காலில் விழுந்து பெண்கள் கோரிக்கை

image

திருவண்ணாமலை மலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது 300க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர். பெண்களில் சிலர் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து வீடுகளை அகற்ற வேண்டாம் என மன்றாடி அழுதபடியே கோரிக்கை விடுத்தனர். மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

News July 27, 2024

தி.மலை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தின் மூலம் ஜூலை 29ஆம் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று முதல் ஜூலை 29ம் தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 15, ஆரணியிலிருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

News July 27, 2024

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் ஆரணி தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஆரணி தச்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. ஜெயவேல் இளங்கோ, கிருஷ்ணா, சுரேஷ், கலையரசு உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News July 27, 2024

திருவண்ணாமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்க வேண்டுமாறு அறிவுத்தப்படுகிறது.

News July 26, 2024

அண்ணாமலையரை தரிசனம் செய்த வானதி சீனிவாசன்.

image

திருவண்ணாமலை, அண்ணாமலையார்
கோயிலில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய
மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அண்ணாமலையார் சன்னதி, மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் சாமி தரிசனம்
செய்தார் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து
மரியாதை செய்து அவருக்கு பிரசாதம் வழங்கினார்.

News July 26, 2024

தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்த ஆலோசனை 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News July 26, 2024

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள்

image

வெறையூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம் சார்பில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.

News July 26, 2024

வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம்

image

 மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம் ஜூலை 29 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5.45 வரை திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, ஸ்ரீகிருஷ்ணா வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற் சங்கங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாமென வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரித்தேஷ் பக்வா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!