Tiruvannamalai

News January 29, 2026

தி.மலை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

தி.மலை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தி.மலை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் ஆப்<<>>பை அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

தி.மலை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

image

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News January 29, 2026

தி.மலை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

தி.மலை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

தி.மலை கோயில் உண்டியலில் ரூ.5 கோடி காணிக்கை!

image

திருவண்ணாமலை: உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை இன்று (29.01.2026) எண்ணப்பட்டது. இதில் ரூ.5 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 806 ரொக்கம், 190 கிராம் தங்கம், 2390 கிராம் வெள்ளி கிடைத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

தி.மலை: விரல் நுனியில் வங்கி கணக்கு!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

தி.மலை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

திருவண்ணாமலை மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <>கிளிக் <<>>செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

வந்தவாசியில் பரபரப்பு!

image

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தெள்ளாா் அருகே தெய்யார் மடம் கிராமத்தில் மது விற்ற செல்வமணி (47) என்பவரை தெள்ளாா் போலீஸாரும், ஆலத்தூா் கூத்துமேடை அருகே மது விற்ற வினோத் (31) என்பவரை கீழ்க்கொடுங்காலூா் போலீஸாரும் ரோந்து பணியின் போது பிடித்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 29, 2026

தி.மலை: பிரபலங்கள் மீது வழக்கு!

image

தி.மலை அண்ணாமலையார் மலை மீது ஏற வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையை மீறி உச்சிக்குச் சென்று வீடியோ வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

News January 29, 2026

தி.மலை: வீடு புகுந்து துணிகர செயல்!

image

செய்யாறு அருகே பைங்கினர் பகுதியில், ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடப்பட்டது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், இது தொடர்பாக விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை பவுன் நகை மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!