Tiruvannamalai

News April 1, 2024

தி.மலை அருகே விபத்து: ஒருவர் பலி

image

வந்தவாசி அடுத்த பழவேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று மாலை திண்டிவனம் வந்தவாசி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

கிராம உதவியாளர் பணி நிறைவு பாராட்டு விழா

image

வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம் படூர் கிராம உதவியாளர் சேகர் பணி நிறைவு பாராட்டு விழாவில் வட்டாட்சியர் பொன்னுசாமி, ஆ.தி.நலத்துறை வட்டாட்சியர் சத்யன், துணை வட்டாட்சியர் ஆனந்தகுமார், வட்ட உணவு வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித், கிராம நிர்வாக அலுவலர் பர்கத் நிஷா, இப்ராகிம், கிராம ஊழியர் சங்க தலைவர் ம.அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 31, 2024

தி.மலை: கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர்

image

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 31, 2024

திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

image

ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News March 31, 2024

தி.மலையில் நாளை தொடக்கம்

image

நாளை ( ஏப்ரல் 1) முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பகவான் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் என அனைத்து ஆசிரியர்களும் பணி விடுப்பு அளித்து விடைத்தாள் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News March 31, 2024

ஆரணி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

image

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (57) இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த செல்லம்மாள் கடந்த 28 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2024

கிரிக்கெட் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்

image

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியும், அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கியும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (மார்ச்.31) \விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 31, 2024

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 31, 2024

ஞாயிற்றுக்கிழமை வார மாட்டு சந்தை

image

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜன் தாங்கள் ஊராட்சியில் அமைந்துள்ள தளவாய்க் குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வார மாட்டு சந்தை நடைபெற்று வருகின்றது. இதில் விவசாயிகள் தங்களுடைய மாடுகளை நேரடியாக விற்பனை செய்தும் வாங்கியும் செல்கின்றனர். இதில் ஆடு,கோழிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

News March 30, 2024

தி.மலையில் பறந்த ராட்சச பலூன்

image

தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி இந்தியன் வங்கி சார்பில் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ராட்சச பலூனை பறக்கவிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (30.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் உடன் இருந்தார்.