India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான இலவச குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நாளை (மே 22) நடைபெறுகிறது. கத்தியின்றி ரத்தமின்றி தழும்பின்றி 10 நிமிடத்தில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பக்க விளைவுகளோ, இல்லற இன்பம் மற்றும் உடல் உழைப்புக்கு பாதகமோ என எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும் இந்த சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3100 வரை வழங்கப்படுகிறது.
திருப்பூர் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில், தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் மீதான தாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் ஊழியர் பற்றாக்குறையை போக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்டி ஆடை வடிவமைப்பு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருபவர் ஸ்ரீ கமலி. இவர் 157 நாட்களாக களிமண் மற்றும் அட்டைகளை கொண்டு, பல கலரில் பெயிண்ட் அடித்து நிஜமாக காணப்படும் ராயல் என் பீல்டு புல்லட் பைக்கை உருவாக்கி நேற்று(மே 20) முழுமைபடுத்தி உள்ளார். இவரை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிருஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாநகர், மற்றும் மாவட்ட அளவில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் தற்போது நடக்கும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தர்ணிகா. சிறு வயது முதலே யோகா, சிலம்பத்தில் ஆர்வமிக்க இவர் முறையாக பயின்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் நடந்த பசிபிக்-ஆசியன் யோகா போட்டியில் கலந்து கொண்டு 3வது பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பெற்றோர், பயிற்சியாளர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரின் ஏராளமான பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்கு பகுதியில் 60 மில்லிமீட்டர் மழையும், தெற்கு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும், மூலனூரில் 38 மில்லி மீட்டர் மழையும், காங்கேயத்தில் 23 மில்லிமீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 364.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர், உடுமலை, தாராபுரத்தில் இயங்கிவரும் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் பயிற்சிபெறும் மாணவ, மாணவிகள் அரசின் வழிகாட்டுதல்படி சலுகைகள், ஊக்கத்தொகை, உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் https://www.skilltraining.gov.in என்ற இணையத்திலும், 0421-2429201 என்ற எண்ணிலும் விவரம் பெறலாம் என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.
திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு சில டிபார்ட்மெண்ட் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பாக்கெட் பொருட்கள், குளிர்பானங்கள் காலாவதி தேதி முடிந்த பின்னும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் கவனக்குறைவாக வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.