India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக, பின்னலாடை உற்பத்திக்கு மூலப்பொருளான ரப்பர் மற்றும் பாலிஸ்டர் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் பாதிப்பு காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதால், இன்று முதல் திருப்பூரில் எலாஸ்டிக் விற்பனை விலையில் 15 சதவீதம் உயர்த்த முடிவு செய்திருப்பதாக எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கண்டியன் கோவில் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் திட்டுப்பாறை என்ற இடத்தில் பி ஏ பி வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து அப்பகுதி மக்கள் அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சுமார் 500 மீட்டர் தொலைவில் அவரை பிணமாக மீட்டனர்.

அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா வரும் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேரான அவிநாசி தேர், இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும். இத்திருவிழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு தெய்வ தரிசனம் பெற்றுச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊடகச் சான்றளிப்பு, பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்ச்.11) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.11) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 30,225 மாணவ-மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற முதல் தேர்வை 29,716 பேர் மட்டுமே எழுதினர். பல்வேறு காரணங்களால் 509 பேர் (தகவலின்படி 458 முதல் 509 வரை) தேர்வு எழுத வரவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி மதியம் 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் யோசனைகளை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அவர்களுக்கு, உறையின் மேல் ‘DAK ADALAT CASE’ எனக் குறிப்பிட்டு மார்ச் 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.