Tiruppur

News March 8, 2026

திருப்பூர்: டிகிரி போதும்., ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 8, 2026

பல்லடம் அருகே பயங்கர தீ விபத்து!

image

பல்லடம் அடுத்த அருள்புரம் பாச்சான்காட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் டையிங் நிறுவனத்தில் நேற்று திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து வேலை செய்து வந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.

News March 8, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்! GOOD NEWS

image

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்களுக்கு செப்டம்பர் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார். இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக அந்தந்த பிறப்புப் பதிவு அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு, ரூ.200 கட்டணம் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 7, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.07) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 7, 2026

திருப்பூரில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

திருப்பூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,

2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,

3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,

4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,

5. முதியோருக்கான அவசர உதவி : 1253,

6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,

7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 7, 2026

திருப்பூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 7, 2026

திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News March 7, 2026

திருப்பூரில் 2026-ல் வெற்றியை இதுதான் தீர்மானிக்குமா?

image

2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனைத்து அரசியில் கட்சியினரும் அவரவர் கட்சியின் தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு டிபன் பாக்ஸ், பாத்திரம், சேலை ,வேட்டி, தட்டு உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பரிசு பொருட்களால் அவர்களுக்கு தேர்தலில் ஆதரவு கிடைக்குமா? திருப்பூர் மக்களே உங்க கருத்து என்ன பதிவு பண்ணுங்க!

News March 7, 2026

திருப்பூரை சேர்ந்தவர் பலி!

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றபோது முதலாம் மலைப் பாதையில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரை டோலி கட்டி மீட்டு அடிவாரத்திற்குத் தூக்கி வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

error: Content is protected !!