India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <
திருப்பூர் மாவட்ட ஊர்காவல் படையில் மண்டல தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஸ்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 07.02.2025 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அல்லது அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் 83 இன்ஸ்பெக்டர்களை டிஎஸ்பியாக பதவி உயர்வு செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சரவணன் ரவை மற்றும் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஊர்காவல் படையில் மண்டல தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஸ்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 07.02.2025 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அல்லது அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(32). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த வினோத், ஈஸ்வர பிரபு அவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மகேந்திரனை இருவரும் தாக்கியுள்ளனர். மகேந்திரன் தாக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வினோத் மற்றும் ஈஸ்வர பிரபுவை கைது செய்தனர்.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் விக்னேஷ். கடந்த 2022 ஆம் ஆண்டு, திருப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், மோகன் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, இன்று திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில், மோகன் விக்னேஷுக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு தெற்கு அவிநாசி பல்லடம் ஊத்துக்குளி ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று மாலை திருப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலிங் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருப்ப பணியிட மாறுதல் அதன்படி 55 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜனவரி 31-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. பணிக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்
திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் சிறார்களுக்கான இந்த போக்சோ வழக்கு குறித்த விசாரணை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில், இளம் சிறார் நீதி குழுத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகாத பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிற்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் சிறார்களுக்கான இந்த போக்சோ வழக்கு குறித்த விசாரணை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் இளம் சிறார் நீதி குழுத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகாத பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிற்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.