Tiruppur

News February 5, 2025

கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற அரசு பள்ளி மாணவி

image

பாரதியாரின் 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலைப்பின் மள்நோக்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைபோட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 3-ம் பரிசு பெற்ற பொங்கலூர் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும்7-ம் வகுப்பு மாணவி ஜெசிகா திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News February 5, 2025

திருப்பூரில் தற்காலிக பதவி உயர்வு 

image

திருப்பூர் மாவட்டத்தில் துணை தாசில்தார் மூவருக்கு, தாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், காங்கயம் வாணிப கிடங்கு உதவி மேலாளராக பணிபுரியும் கதிர்வேல், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் குணசேகரன், மடத்துக்குளம் தாசில்தாராகவும், ‘ஓ’ பிரிவு தலைமை உதவியாளர் சபரிகிரி, பல்லடம் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 5, 2025

திருப்பூர் அதிமுக MLA கலெக்டரிடம் மனு

image

திருப்பூர் வேலம்பாளையத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடம் பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்காததால் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கே.என்.விஜயகுமார் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. (அதிமுக) வலியுறுத்தி கலெக்டர் கிறிஸ்துராஜூவிடம் நேற்று மனு அளித்தார்.

News February 5, 2025

வெண்கல பதக்கம் வென்று திருப்பூர் மாணவி சாதனை

image

இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. தேசிய விளையாட்டு போட்டியில் பல்வேறு விளையாட்டுகளில் ஒரு பகுதியாக யோகாசனப் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட திருப்பூர் வீராங்கனை யோகா வைஷ்ணவி கலை யோகாசன சிங்கிள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

News February 5, 2025

மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசு 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்திய பட்ஜெட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை என்றும், வழக்கமான கார்ப்பரேட் பட்ஜெட் ஆகவே இது அமைந்ததாகவும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News February 5, 2025

திருப்பூரில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

நிர்வாக நலன் கருதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் கலெக்டர் அலுவலக குற்றவியல் அலுவலக மேலாளராக இருந்த சரவணன் திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும், திருப்பூர் கலெக்டர் அலுவலக பொது மேலாளராக இருந்த ஜெய்சிங் சிவக்குமார் திருப்பூர் கோட்ட கலால் அலுவலராக என 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 4, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசாரின் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

News February 4, 2025

திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் அறை உள்ளது. இன்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கு மாற்றம் செய்வதால் திறக்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News February 4, 2025

திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் மூன்றாம் பாலின நபர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வசதியாக வருகிற 7-ந் தேதி முதல் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று குறைதீர்க்கும் முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் அறை எண்.120-ல் நடைபெறும் எனதிருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

மாநில அளவில் திருப்பூர் மாணவர்கள் சாதனை

image

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த கல்வியாண்டின் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி சிவகங்கை மாவட்டம் பாண்டியன் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி கலந்து கொண்டு சாதனை படைத்தார். அவருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

error: Content is protected !!