Tiruppur

News September 28, 2025

திருப்பூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் என்ன செய்வது?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

News September 28, 2025

திருப்பூர்: உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் மரியாதை

image

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த சேர்ந்த மணிகண்டன் (33), கோகுலபிரியா (29) ஆகிய 2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இரு சடலங்களும் அவரவர் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அஞ்சலி செலுத்தினார்.

News September 28, 2025

திருப்பூர்: SBI வங்கியில் வேலை! SUPER சம்பளம்

image

திருப்பூர் மக்களே பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய 122 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.2 ஆகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News September 28, 2025

திருப்பூர்: கிராம வங்கி வேலை.. இன்றே கடைசி!

image

திருப்பூர் மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News September 28, 2025

திருப்பூர்: IMPORTANT இனி பட்டா மாற்றம் சுலபம்!

image

திருப்பூரில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்த நிலையில் தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. https://tamilnilam.tn.gov.in/citizen/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்ய வேண்டும். விரைவாக பட்டா ரெடியாகும். SHARE பண்ணுங்க!

News September 28, 2025

திருப்பூர்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

திருப்பூர் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இந்த இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க!

News September 28, 2025

விஜய் கூட்டத்தில் திருப்பூரை சேர்ந்தவர்கள் பலி

image

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் தீர்த்தம்பாளையம் தாராபுரம் மெயின் ரோடு வெள்ளக்கோயில் பாலாஜி மகன் மணிகண்டன்(33) மற்றும் காங்கேயம், செம்மாண்டபாளையம் வெள்ளகோவில் ஜெயபிரகாஷ் மனைவி கோகுலபிரியா(28) என தகவல் வெளியாகியுள்ளது.

News September 27, 2025

திருப்பூர்: இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 27.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News September 27, 2025

திருப்பூர்: 400 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு

image

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் 2010 முதல் பதிவு செய்யப்பட்ட 154 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா, கோவை மதுக்கரை பகுதியிலுள்ள தனியார் கழிவுப் பொருள் மேலாண்மை நிலையத்தில் நேற்று எரித்து அழிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News September 27, 2025

திருப்பூர்: வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

image

திருப்பூர் மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <>NSDL<<>>
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க…

error: Content is protected !!