Tiruppur

News June 13, 2024

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளதாவது: உடுமலையில் 107 மகளிர் தங்கும் விடுதிகள் பதிவு செய்துள்ளன. மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகள், கல்லூரி விடுதிகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகளின் நிர்வாகிகள், மேலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News June 13, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

image

மடத்துக்குளம் தாலுகாவில் சங்கராமநல்லூர் ருத்ராபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகின்ற ஜூன் 15-ம் தேதி ரேசன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ரேஷன் கார்டுகள் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News June 13, 2024

திருப்பூர்: போலீசார் விழிப்புணர்வு கூட்டம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை கிராமத்தில் போலீசார் சார்பில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், ஊராட்சி கவுன்சிலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், குற்றச் சம்பவங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News June 13, 2024

திருப்பூர்: வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை

image

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஈரோடு பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று கலந்து கொண்டார். இந்நிகழ்வின்போது மூலனூர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

News June 13, 2024

திருப்பூர்: அரசு கல்லூரியில் இன்று கலந்தாய்வு

image

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நேற்று மூன்றாம் நாள் கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது இயற்பியல், வேதியியல், தாவரவியல் உட்பட பல்வேறு பிரிவுகளில் 132 மாணவர்கள் சேர்ந்தனர். அரசு கல்லூரியில் நடைபெற்ற மூன்று கலந்தாய்வுகளிலும், தற்போது வரை 629 பேர் சேர்ந்துள்ள நிலையில், இன்று 4வது முறையாக கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.

News June 12, 2024

திருப்பூரில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பைஜ் அகமது என்பவரது இல்லத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுக்களை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபுவிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

News June 12, 2024

திருப்பூர் வரி வசூல் மையத்தில் ஆணையாளர் ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட நஞ்சப்பா நகர் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.‌ தினந்தோறும் விண்ணப்பம் பதிவு செய்யும் பதிவேடுகளையும் ஆய்வு செய்த அவர் மண்டல அலுவலகத்தின் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News June 12, 2024

திருப்பூரில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

image

திருப்பூர் துளசிராவ் வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சத்யாவை ராமமூர்த்தி கத்தியால் குத்தியுள்ளார். தொடர்ந்து தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். சிகிச்சை பெற்று வந்த சத்தியா இன்று உயிரிழந்த நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி ராமமூர்த்தியை கைது செய்தனர்.

News June 12, 2024

திருப்பூர் அருகே பெருங்கற்கால கல்வெட்டுகள்

image

மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மடத்தூர் மயிலாபுரம் பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக 20-க்கு மேற்பட்ட பெருங்கற்கால கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. எனவே மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News June 12, 2024

திருப்பூர் அருகே மாணவர் சேர்க்கை

image

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் சேர்ந்தனர். இன்று நடைபெறும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10 வகுப்பு, பிளஸ் -1 , பிளஸ் -2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஜாதி சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை கொண்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!