Tiruppur

News July 26, 2024

காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழகம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக காதில் பூச்சுற்றியும் பட்டை நாமம் அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News July 26, 2024

திருச்சியை வெல்லுமா திருப்பூர்

image

திருச்சி-திருப்பூர் அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நாளை இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில், திருச்சி-3, திருப்பூர்-4 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வரும் 30ஆம் தேதியுடன் லீக் போட்டிகள் நிறைவடைய உள்ளதால், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. யார் வெற்றி பெறுவார்?

News July 26, 2024

ரூ.5 லட்சம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

image

பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி, தன்னுயிர் நீத்த திருப்பூரை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார். வெள்ளக்கோயிலை சேர்ந்த சேமலையப்பன், தனியார் பள்ளிப் பேருந்து டிரைவர். இவர், வேனில்(ஜூலை 24) 20க்கும் மேற்பட்ட குழந்தைகளோடு சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வலியில் துடித்த நிலையிலும், போராடி வேனை பாதுகாப்பாக நிறுத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

News July 25, 2024

குழந்தைகள் உயிரை காத்த டிரைவர்: முதல்வர் இரங்கல்

image

திருப்பூரில் பள்ளி வாகனம் ஓட்டும் போது மலையப்பனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, வேனில் இருந்த குழந்தைகளை மீட்க சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு உயிரிழந்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலில் தனது X தளத்தில், இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என பதிவிட்டுள்ளார்.

News July 25, 2024

தேமுதிக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் மாநகரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.

News July 25, 2024

மரணத்திடம் தோற்று, மனங்களை வென்ற டிரைவர்

image

திருப்பூர், வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (48), தனியார் பள்ளி ஓட்டுநரான இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வேனில் பள்ளி குழந்தைகள் 20 பேர் இருப்பதை உணர்ந்த சேமலையப்பன் சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் இருக்கையிலே உயிரிழந்தார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News July 25, 2024

பெண் தையல் தொழிலாளர்களுக்கு அழைப்பு

image

திருப்பூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் பல்லடம் பெண்கள் எழுதுபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினர்களை சேர்ப்பதற்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வரும் 31 ஆம் தேதிக்குள் பல்லடம் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 25, 2024

‘ஷீடு’ திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர் மரப்பினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஷீடு திட்டம் மைய அரசால் கல்விக்கான அதிகாரமளித்தல், சுகாதாரம், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், நிலம் மற்றும் வீடு வழங்குதல் ஆகிய திட்டங்கள் உள்ளன. தகுதி உள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையத்தளமான www.dwbdnc.dosje.gov.in வாயிலாக விண்ணப்பிக்ககாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 25, 2024

திருப்பூரில் 41 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

image

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்போர், தயாரிப்போர் என நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 41 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

பல்லடம் காவல் ஆய்வாளருக்கு SP பாராட்டு

image

தமிழக அரசு சார்பில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக பல்லடம் காவல் நிலையம் கடந்த 23 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட SP நேற்று காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டினார்.

error: Content is protected !!