India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூருக்கு வருகிற 19ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி வருகைபுரியும் நிலையில், தற்போது அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ரயில் நிலையம் எதிரில் பேராசிரியர் உருவப்படத்திற்கு மரியாதை, திருப்பூர் தெற்கு கலைஞர் நூலகம் திறப்பு விழா, ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம், திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு, கட்சி நிர்வாகி இல்ல திருமணம் ஆகியவை அடங்கும்.

தமிழக துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளைய தினம் திருப்பூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வருகை தர உள்ளார். திருப்பூர் வரும் அவர் முன்னதாக குமரன் நினைவகம் அருகே பேராசிரியர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

குண்டடம் அருகேயுள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (52), கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவர் ஓய்வு நேரங்களில் அருகேயுள்ள கோவில் விழாக்களை சோசியல் மீடியாக்களில் லைவ் செய்வது, வித்தியாசமான சமையல் செய்வது என அசத்தி வருகிறார். அதிலும் தக்காளி, ஆரஞ்சு, ஆப்பிள் பழங் களை நைசாக வெட்டி வித்தியாசமான பூக்களை உருவாக்கி வியக்க வைக்கிறார்.

திருப்பூரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ ரூ.70 முதல் அதிகபட்சம் ரூ.90 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆந்திர மாநில தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் இதன் விலை சரிவை சந்தித்துள்ளது. ஆட்டோக்களில் தக்காளியின் தரத்திற்கு தகுந்தவாறு 4 கிலோ ரூ.100, ஐந்து முதல் 6 கிலோ ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூரில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த மாதம் 11.2% வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக உயர்ந்து கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 9,460 கோடி ரூபாய் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.2% அதிகம் என ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தினர் நேற்று தெரிவித்தனர்.

திருப்பூருக்கு நாளை மறுநாள் (டிச.19) துணை முதல்வர் உதயநிதி வருகையை முன்னிட்டு நகரப் பகுதியில் தூய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அன்று காலை, உடுமலையில் நடைபெறும், கருணாநிதி நூற்றாண்டு விழா நினைவு நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 39வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் & 400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் முதலிடம் பிடித்து இரண்டு தங்க பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்த திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீ வர்த்தினி மரியாதை நிமித்தமாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமாரை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் பெற்றோர்& பயிற்சியாளர் இருந்தனர்.

சர்வதேச தேயிலை தினத்தை ஒட்டி தேயிலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், தேனீர் கடை உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மற்றும் தேனீர் விரும்பிகளுக்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சாமிநாதன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (16.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

➤ பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ➤ உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து 2483 கன அடி ➤ அனுப்பர்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது ➤ பல்லடம்; மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ➤ அவிநாசியில் டிச.18 கடையடைப்பு போராட்டம் ➤ மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 364 மனுக்கள் ➤ திருப்பூரில் ஸ்வெட்டர் விற்பனை ஜோர் ➤ தாராபுரத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.