India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

1.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருப்பூரில் பேரணி
2.திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
3.திருப்பூர் கடையடைப்பு போராட்டம்: கொமுக தலைவர் ஆதரவு
4.திருப்பூரில் கடை அடைப்பு போராட்டம்
5.ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மத்திய சிறை , திருப்பூர் மாவட்ட சிறை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலை கிளைச்சிறைகளில் சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 35 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 25 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இன்றைய தினம் 16 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, தொழில்வரி, காலி இட வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டிக்கும் வகையில் அனைத்து வணிகர்கள் சங்கங்கள் சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை நிறுத்தி உள்ளன.

மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிராக இன்று திருப்பூர் மாநகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சிகளுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் மாநகராட்சியில் பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் வரி உயர்வுகளை கண்டித்து இன்று (டிசம்பர் 18) கடையடைப்பு நடைபெறுகிறது. வரிகளை உயர்த்திய மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வரி உயர்வை ரத்து செய்யவும், அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை, தொழில் அமைப்புகள், பின்னலாடை நிறுவனத்தினர், ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து மத்திய அரசு வாடகை கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியை கண்டித்தும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று திருப்பூரில் கடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் நாளை (டிச.19) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு. அவை: நாரணாபுரம், தாராபுரம், திருப்பூர் ஆகிய துணை மின்நிலையங்களுக்குட்பட்ட வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வளையபாளையம், சேகம்பாளையம், சிஎம்பி, வரப்பாளையம், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் சந்திப்பு, காலேஜ் ரோடு, குண்டடம், கல்லிவலசு, கூத்தாம்பூண்டி, மூலனூர், சர்மங்கல், DVபட்டினம், SKபாளையம்.

1.பஞ்சலிங்க அருவியில் 6வது நாளாக குளிக்க தடை
2.மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்
3.புதுப்பை,காங்கேயத்தில்,தொப்பம்பட்டி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
4.அவிநாசியில் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
5.திருப்பூரில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருப்பூரில் நடைபெற்று வரும் 10ஆவது புத்தகத் திருவிழா திருவிழாவின் நாள் நிகழ்வில் தமிழ்நாடு மனித வள மேலாண்மை மேலாண்மைத் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். கண்காட்சியில் உள்ள பதிப்பகங்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்வையிட்டார். உடுமலை நகர்மன்ற முன்னாள் தலைவர் சி.வேலுச்சாமி சத்தியம் பாபு புத்தகதிருவிழாவில் கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.