Tiruppur

News July 31, 2024

காவலர்களை பாராட்டிய மேற்கு மண்டல ஐஜி

image

திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாபாளையம் அருகே நேற்றைய தினம் வங்கி ஊழியர் கார்த்திகா என்பவர் அணிந்திருந்த 2 பவுன் தாலிச் சங்கிலி வழிப்பறி செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவலர்களை மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி நேரில் பாராட்டினார்.

News July 31, 2024

திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று இரவு (10 மணி வரை) இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ➤திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். ➤மூலனூரில் அரியவகை ஆந்தையை வனத்துறை மீட்டனர். ➤உடுமலையில் நாளை(காலை 9 மணி டூ மாலை 4 மணிவரை) மின்தடை அறிவிப்பு. ➤ ஊத்துக்குளி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு இறந்தவர் யார் என விசாரணை.

News July 31, 2024

மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்

image

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

News July 31, 2024

அரிய வகை ஆந்தை மீட்பு

image

மூலனூரைச் சேர்ந்த சரவணன், தாராபுரம் சாலையில் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் ஒரு வித்தியாசமான பறவையை காக்கைகள் கொத்திக்கொண்டிருந்தன. இதையடுத்து அவர் காங்கயம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனக்காப்பாளர் அதனை மீட்டு, அரியவகை ஆந்தை என்று தெரிவித்தார்.

News July 31, 2024

திருப்பூரில் மழை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில பகுதிகளில் நீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

வெற்றியை நழுவ விட்ட திருப்பூர் அணி

image

TNPLஇல் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் கோவை அணியிடம் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்தது திருப்பூர் அணி. திருப்பூர் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை துரத்திய கோவை அணியின் சாய் சுதர்சன் (123*), முகிலேஷ் (48*) ரன்கள் அடித்தனர். இதையடுத்து 18.5 ஓவரில் இலக்கை எட்டி கோவை அணி அபார வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி ஆக.4இல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

News July 30, 2024

திருமூர்த்தி அணையில் வெளுத்து வாங்கிய கனமழை

image

திருப்பூர், உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்கு அணைப்பகுதியில் 18 மி.மீட்டரும், நல்லாறு பகுதியில்
50 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News July 30, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், திருப்பூர் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 96424-22022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News July 30, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 3ம் தேதி தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

News July 30, 2024

TNPL: கோவையை வீழ்த்துமா திருப்பூர்?

image

கோவை – திருப்பூர் இடையேயான TNPL ப்ளே-ஆஃப் போட்டி இன்றிரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. 2 பலம்வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு செல்லும். ஒரேயொரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்த கோவையை திருப்பூர் அணி வீழ்த்துமா? என கமெண்டில் சொல்லுங்க.

error: Content is protected !!