Tiruppur

News August 12, 2024

திருப்பூரில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

image

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது ஒரே மகன் பிரதீஷ்(5). இவர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News August 12, 2024

திருப்பூரில் 4 ம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி முகாம்

image

திருப்பூர், கடந்த 2024 ஆம் கல்வி ஆண்டு +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் முகாம் நடைபெறுகிறது. கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் பெற்றோர் இல்லாத மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 4ம்கட்ட முகாம் கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

திருப்பூரில் இன்று தொடங்குகிறது 

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இன்று( 12.8.24) அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் சேயூர் சிவசக்தி மஹாலில் கருமாபாளையம், வேட்டுவபாளையம், முறியாண்டாம்பாளையம் மற்றும் புஞ்சை தாமரைக்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2024

பல்லடத்தில் நான்கு பேர் கைது

image

திருப்பூர், பல்லடம் அருகே கடந்த வியாழக்கிழமை 5 பேர் கொண்ட கும்பல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டி தலையை முழுவதுமாக சிதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலையில் ஈடுபட்ட நித்திஷ்குமார் (22), காளீஸ்வரன்(25) மற்றும் அவர்களுக்கு தகவல் அளித்த பிரபுதேவா(32), சாமிநாதன்(52) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News August 11, 2024

திருப்பூரில் பழிக்கு பழி நடந்த கொலை(1/4)

image

திருப்பூரில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேர், வினோத் கண்ணன் என்பவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை திருப்பூர் மாவட்டத்தை நடுக்க வைத்தது. இதில் அவரது தலையை முழுவதுமாக சிதைத்த கும்பல், இடது கையையும் துண்டாக வெட்டியது. இதுகுறித்து போலீசாரின் விசாரணையில்( அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 11, 2024

திருப்பூரில் பழிக்கு பழி நடந்த கொலை(2/4)

image

சிவகங்கையைச் சேர்ந்தவர் அக்னிராஜ். கடந்த 2021ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்த அக்னி ராஜை மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர். இதற்கு பழிவாங்க வேண்டும் என அக்னி ராஜின் நண்பர்கள் “அக்னி பிரதர்ஸ்” என்ற குழுவை தொடங்கி அக்னி ராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஸ், அழகு பாண்டி என 3 பேரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

News August 11, 2024

திருப்பூரில் பழிக்கு பழி நடந்த கொலை(3/4)

image

இந்நிலையில் தான் பல்லடத்தில் வினோத் கண்ணன், பொன்னையா ஆகிய 2 பேர் பணியாற்றி வருவதை அக்னி பிரதர்ஸ் குழுவினர் நோட்டமிட்டு வந்தனர். இதனையடுத்து நேற்று முன் தினம் 2 பேரை கொலை செய்ய திட்டமிட்டு சென்ற போது பொன்னையா தப்பிச் சென்றுள்ளார். வினோத் கண்ணன், இவர்களை பார்த்து தப்பிக்க முயன்று ஓடியுள்ளாார். அவரை துரத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளது.

News August 11, 2024

திருப்பூரில் பழிக்கு பழி நடந்த கொலை(4/4)

image

மைனர் மணி கொலை செய்யப்பட்ட போது, வினோத் கண்ணன் வெட்டு காயம் அடைந்தவர். வினோத் கண்ணனுக்கும் இக்கொலையில் தொடர்பு இருக்கும் என கருதி, அவரை அக்கும்பல் நேற்று முன்தினம் படுகொலை செய்துள்ளது. இப்படி கொலைகளை அரங்கேற்றி உள்ள இக்குழு அவற்றை சினிமா பாணியில் “பழிக்கு பழியாக நன்கு முடிந்து விட்டது” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 11, 2024

முக்கிய அறிவிப்பை வெளியிடும் அண்ணாமலை

image

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தை திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் அறிவிப்பை மாலையில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News August 11, 2024

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையத்தில் ரூ.36.43 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இதில் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்எல்ஏ, எம்.எல்.ஏ, தினேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது கட்டிடங்களின் தரம் மற்றும் அமைப்புகளை ஆய்வு செய்தார்.

error: Content is protected !!