Tiruppur

News January 20, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய நால்வர்: அதிரடி கைது

image

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற தமிழ்ச்செல்வன், யுவராஜ், தணிகாச்சலம் மற்றும் பிரசாத் ஆகிய நால்வரை 15 வேலம்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் போதை ஊசி பயன்படுத்தியதுடன், விற்பனையிலும் ஈடுபட்டது உறுதியானதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்த போதை ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 20, 2026

உடுமலை அருகே பஸ் -லாரி மோதி விபத்து!

image

உடுமலை ராகல்பாவி அருகே மூணாறிலிருந்து கோவை நோக்கிச் அரசுப் பேருந்து சென்றது. அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென வலது புறம் திரும்பிய போது லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து 13 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றனர். இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 20, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்! முக்கிய தகவல்

image

காங்கயம் தாலுகா, பாப்பினி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற 108 நபர்கள், நிபந்தனைப்படி அங்கு வீடு கட்டி வசிக்கவில்லை என்பது ஆய்வில் தெரிந்தது. அவர்களை அடையாளம் காண முடியாததால், 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அல்லது ஆதிதிராவிடர் நல அதிகாரியை அணுகத் தவறினால் பட்டாக்கள் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News January 19, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பல்லடம் நகர், ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பபட்டி, மங்கலம் ரோடு, வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம்,, 15 வேலாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், காளம்பாளையம், பரமசிவம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 19, 2026

திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 19, 2026

திருப்பூர்: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 19, 2026

திருப்பூர் அருகே சோகம்: வெல்டிங் ஊழியர் பலி

image

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. மாற்றுத்திறனாளிகளான இவர் மாஸ்கோ நகர் பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே தண்டவாளத்தை கடக்கும்போதே எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News January 19, 2026

திருப்பூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 19, 2026

திருப்பூர்: 10th போதும் அரசு வங்கியில் வேலை APPLY NOW

image

திருப்பூர் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் மூலம் மேலும் தகவல் அறிந்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!