Tiruppur

News August 15, 2024

ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்

image

திருப்பூர், தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 16வயது சிறுவன் மாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுதியள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள பள்ளி மாணவர்கள் 6 பேர் குளிக்க சென்றுள்ளனர். அதில் ஒரு மாணவன் மாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

News August 15, 2024

திருப்பூர்: கொடி ஏற்றிய கலெக்டர்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுரியில் சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியகொடி ஏற்றினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இதன் பின்னர் தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு  செய்யப்பட்டது.
மேலும், ரூ.3 கோடியே 5 லட்சம் மதிப்பில் 84 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

News August 15, 2024

சுதந்திர போராட்டத்தில் திருப்பூர் தியாகிகள்

image

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடி வருகின்றோம். சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தால் நாம் இன்று சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். திருப்பூரில் இருந்து சுதந்திரப் போராட்டத்திற்காக பங்கு பெற்று உயிர் தியாகம் செய்த வீரர்களின் படங்கள் திருப்பூர் குமரன் நினைவகத்தில் மக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பெண் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

News August 15, 2024

இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு அணைத்து கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கேயம் ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சிகளுக்கும் கிராம சபை கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

News August 15, 2024

திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

image

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பஸ் நிலையம், கோவில், மசூதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

News August 15, 2024

திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

image

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 15, 2024

திருப்பூரில் வடக்குத் துணை கமிஷனர் பொறுப்பேற்பு

image

திருப்பூர் வடக்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன் மாநகர தலைமை இடத்துக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக திருச்சி மண்டலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த சுஜாதா திருப்பூர் வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று தனது அலுவலகத்தில் சுஜாதா பொறுப்பேற்றுக் கொண்டார்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

error: Content is protected !!