India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற திட்டத்தின்கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்டச் செயலார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக (காங்கேயம், தாராபுரம்) யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், திருப்பூர் தெற்கு (உடுமலை, மடத்துக்குளம்) திருமலை, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக ( அவிநாசி, பல்லடம்) சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கேயம், திருப்பூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்காக கரூர் மாவட்டம் புகலூர் தாலுகாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் தரணிஷ் விடுமுறை என்பதால் நேற்று வேலைக்கு வந்துள்ளார். திடீரென மண்டபத்தில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும், ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் அதே நாள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் மனிதக் கழிவு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேசத்தினர் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் வேலம்பாளையம் அண்ணா வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த மூன்று பேரை வேலம்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போலி ஆதார் கார்டை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்லிடப்பேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரியில் தரமற்ற உணவுப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பேக்கரிக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான நூல் விலை பிப்ரவரி மாதத்திற்கும் விலை ஏதும் மாற்றமின்றி தொடர்வதாக நூற்பாலைகள் தெரிவித்தன. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.