India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் கனரா வங்கி மூலம் 10 நாள் இலவச போட்டோ பிரேம், லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான நேர்காணல் 29.01.26 அன்று நடக்கும். ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் 100 நாள் வேலை அட்டை உள்ளோருக்கு முன்னுரிமை உண்டு. விருப்பமுள்ளோர் 94424-13923, 99525-18441 எண்களைத் தொடர்புகொள்ளலாம். SHARE IT

திருப்பூர் புத்தகத் திருவிழா வளாகத்தில் செல்பி கார்னர் அமைக்கப்பட்டிருந்தது. இதில் திருவள்ளுவர் ,பாரதியார், அம்பேத்கர் ,பேரறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தை பெரியாரின் படம் இல்லை என சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நேற்று புத்தகத் திருவிழா குழுவினரால் தந்தை பெரியார் படம் வைக்கப்பட்டது .

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் கனரா வங்கி மூலம் 10 நாள் இலவச போட்டோ பிரேம், லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான நேர்காணல் 29.01.26 அன்று நடக்கும். ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் 100 நாள் வேலை அட்டை உள்ளோருக்கு முன்னுரிமை உண்டு. விருப்பமுள்ளோர் 94424-13923, 99525-18441 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சி பாளையம் ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசை தம்பி(23) என்பதும் அவர் அந்த பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

உடுமலை அருகே பெரிய வாளவாடியை சேர்த்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி உடன் விஜய் என்பவர் பேசுவதை வெள்ளிங்கிரி கண்டித்தால் மனைவி தாய் வீட்டுக்கு சென்றார். ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி விஜயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது விஜய் வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது இதில் படுகாயம் அடைந்த வெள்ளிங்கிரி உடுமலை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தளி காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.26) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.