India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)

திருப்பூர் மக்களே, ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250- ரூ.53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <

திருப்பூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

திருப்பூர் மாநகரில், தாராபுரம் சாலையில் இருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய முக்கிய போக்குவரத்து வழித்தடம். இன்று காலை அடைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, தற்காலிகமாக சாலை அடைக்கப்படுவதாக திடீரென தடுப்புகள் அமைக்கப்பட்டதால், விடுமுறை நாளான இன்று வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை மூலனூர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா(25). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவருக்கும் கோவை தென்னமநல்லூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக்குக்கும் பழக்கமாகி காதலாகி கடந்த 12 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜீவிதா மருத்துவம் படித்திருந்தாலும் உரிய வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.