Tiruppur

News January 24, 2026

திருப்பூர் கொலை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

திருப்பூர், கங்கா நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, அனில் குமார் ஜெனா என்பவர் கொலை செய்த வழக்கில், இளம் சிறார் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞரை ஓராண்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் வைக்க நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

News January 24, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்!

image

திருப்பூர், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போயம்பாளையம் பகுதியில், போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபர்களை விசாரணை செய்தபோது, அவர்களிடம் கூர்மையான வாள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராகவா ஆனந்த், மருதுபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து, வாள் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

News January 23, 2026

சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானம்

image

பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், குன்னத்தூரில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பொதுமக்களின் அவதியை போக்க அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, குடிநீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

News January 23, 2026

திருப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்

image

திருப்பூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News January 23, 2026

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

News January 23, 2026

திருப்பூர்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்தியாவில் முக்கிய வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் முக்கிய பதவிகளில் உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்., 3-ம் தேதி ஆகும்.

News January 23, 2026

திருப்பூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

திருப்பூர்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 23, 2026

திருப்பூர்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 23, 2026

திருப்பூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<> www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!