Tiruppur

News May 4, 2024

திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 4, 2024

திருப்பூர்: மாணவர் உடல் தகனம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வி கேஸ் ஐயப்பன் இவரின் மகன் தீபக் சாரதி சென்னை அருகே கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மே தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற போது உயிர் இழந்தார். இவரது உடல் நேற்று இரவு உடுமலை கொண்டுவரப்பட்டு மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

News May 4, 2024

திருப்பூர்: வழக்கில் முடிந்த ‘INSTA’ காதல் !

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா ஊத்துக்குளியை சேர்ந்தவர் வடிவேல்(25), கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து வருகிறார். இவர் 30 வயதான தனது உறவுக்கார பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பின்னர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வடிவேலை நேற்று(மே 3) போலீசார் கைது செய்தனர்.

News May 4, 2024

திருப்பூர்: சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்து கோவை அழைத்து வந்தனர். கோவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில் சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானது. காயமடைந்த சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News May 4, 2024

திருப்பூர்: புது மாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை

image

திருப்பூர் ராக்கியாபாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி (37), டிரைவர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோபிக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 4 மாதங்களாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த கோபி விஷம் தின்று நேற்று தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 4, 2024

திருப்பூர் அருகே வாகனங்கள் செல்ல முடியாத நிலை

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இந்த இரு வழிச்சாலையை தற்போது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. எனவே காங்கேயம் கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

News May 3, 2024

காங்கேயத்தில் புத்தகத் திருவிழா

image

காங்கேயம் நகரத்தில் நகர ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

News May 3, 2024

அமராவதி முதலைப் பண்ணை

image

திருப்பூாில் அமைந்துள்ளது அமராவதி முதலைப் பண்ணை இந்தியாவின் மிகப்பொிய முதலைகள் பாதுகாப்பு பண்ணையாகும். அமராவதி நீா்த்தேக்கத்தின் சுற்றுப்புற வனப்பகுதிகளிலிருந்து முதலை முட்டைகள் சேகாிக்கப்பட்டு முதலைப் பண்ணையில் அடைகாக்கப்பட்டு பொறிக்கப்படுகின்றன. பல வளா்ந்த முதலைகள் இங்கிருந்து நீா்த்தேக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பொழுது இங்கே 98 முதலைகள் வளா்க்கப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகின்றன.

News May 3, 2024

திருப்பூரில் கூடுதல் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி மகளிர் கலை கல்லூரியில் வைக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 256 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் கூடுதலாக 8 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News May 3, 2024

கோடை வெயிலை சமாளிக்க திருப்பூரில் புதிய முயற்சி

image

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிக்னலில் இருக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.