India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் பாலமுருகனை நேரில் சந்தித்த பல்சமய நட்புறவு கழகத்தினர், வரும் தேர்தலுக்கான தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதற்கான ஆதரவுக் கடிதத்தை மாவட்டத் தலைவர் ஷாஜகான் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்டத் துணைத் தலைவர் நூர் முகமது மற்றும் மாநகர இளைஞரணி பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் பாலமுருகனுக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

திருப்பூர் காசிபாளையம் பார்வதி நகரில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் முறைகேடாக தங்கி இருப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் விசா காலம் முடிந்தும் திருப்பூரில் தங்கி இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜான் கெலுச்சி ஒப்போட்டடா என்பவரை கைது செய்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார். இதன்படி காங்கயம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பணியில் சேராதவர்களுக்கு ஊதியமில்லா விடுப்பாகக் கருதப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பூர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாவட்டச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமார், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கட்சித் தலைவருக்குப் பூங்கொத்து வழங்கித் தன்னை இணைத்துக் கொண்ட அவரோடு, முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். இம்மாற்றம் திருப்பூர் மாவட்ட அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 28.02.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், காவல் துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவி 108 அழைக்கவும்.

திருப்பூர் மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT.

திருப்பூர் மாவட்டத்தில் கண்டியன்கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (60) உடல்நலக் குறைவால் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். குருவாயூரப்பன் நகர் வாசுகி (33) குழந்தையில்லாத மனஉளைச்சலில் தற்கொலை செய்தார். கிருஷ்ணாநகர் தங்கராஜ் (41) குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.