Tirupathur

News May 8, 2024

10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருப்பத்தூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 வரை மணி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 7, 2024

திருப்பத்தூரில் 107.96 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து கடும் வெயில் வதைத்தது. இன்று 107.96 டிகிரி வெயில் திருப்பத்தூரில் பதிவாகியுள்ளதாக பேரிடர் மற்றும் மீட்புத்துறை வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

News May 7, 2024

காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி.

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் மாணவி ஒருவர் நுழைவுச்சீட்டை மறந்து விட்டு தேர்வு மையத்திற்கு வந்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவிக்கு அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கணேசன் உடனடியாக நுழைவு சீட்டை பதிவிறக்கி மாணவிக்கு தேர்வெழுத உதவி செய்தார். இச்செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் கணேசனை நேரில் அழைத்து பாராட்டினார்.

News May 7, 2024

திருப்பத்தூரில் வெப்ப அலை: எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெப்ப அலை தற்காப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், தேவை இன்றி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியிலில் வர வேண்டாம், சன் கிளாஸ் அணிய வேண்டும் , விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News May 7, 2024

ஜோலார்பேட்டையில் வாலிபர் பலி

image

மேற்கு வங்காளம் பார்பரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் லாகூர் (44). இவர் நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது திடிரென வலிப்பு நோய் ஏற்பட்டு கிழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையின் அளவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு காற்றுடன் கூடிய கனமழை மாவட்டத்தில் அதிகப்படியான ஆம்பூரில் 43.40 மி.மீ வாணியம்பாடி 36.00 மி.மீ, நாட்றம்பள்ளி 36.00 மி.மீ, ஜோலார்பேட்டை 22.00 மி.மீ, ஆலங்காயம் 31.00 மி.மீ, திருப்பத்தூர் 18.60 மி.மீ விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் மலை தொடர்பு என்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News May 7, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

 வாணியம்பாடி மாணவி முதலிடம்

image

வாணியம்பாடி அல்ஹுதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆதீலா நிஹால் +2 அரசு பொது தேர்தலில் 600 மதிப்பெண்களுக்கு 596 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடமும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி மின்ஹா கவுனேன் 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் படேல் முஹம்மத் யூசுப், பள்ளி முதல்வர் பாராட்டினார். 

News May 6, 2024

திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

நாட்றம்பள்ளி அரசு பள்ளியில் 100% தேர்ச்சி

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வெளியான பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதன் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.