India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் நகர தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் வேலூரில் இருந்து ஆம்பூர் வழியாக பேரணாம்பட்டு செல்லும் பைபாஸ் புறவழிச்சாலை ராஜீவ் காந்தி சாலை மூடப்பட்டுள்ளதால் ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் அருகே சென்று பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டும். மேலும் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திற்கு அடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் வகையில் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து 4 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனையில் 2438 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.98 லட்சத்து 10 ஆயிரத்து 825 செலுத்தப்பட்டதாக இன்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி, கோனேரிகுப்பம், பழத்தோட்டம் பகுதிகளில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் சேதப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். ஒப்பந்ததாரர் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தார் சாலையை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட புகாரில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். புது சொத்துக்களை சேதப்படுத்தினால் நடவடிக்கை பாயும்” என்றும் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்தார்.
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் அப்பகுதி இளைஞர்கள் குளிக்க சென்றனர். அப்போது தடுப்பணையில் கிடந்த சாமி சிலை எடுத்து வந்த பார்த்த போது சாமி சிலை கண்விழித்து பார்த்ததாக சிலையை கூறி ஓட்டம் பிடித்தனர். அதிசய சிலை இங்கு எப்படி வந்தது என்பது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் சிலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர் இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 100.76 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 74.84டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள எல்.சி.81 ரயில்வே கேட் தினசரி 100 மேற்பட்ட ரயில்கள் செல்வதால் ரயில்வே கேட் மூடப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடைகால வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் பரிந்துரைப்படி நகராட்சி சார்பாக கோடைகால தற்காலிக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.
ஏலகிரியில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மலைகளின் நடுவில் 50 மீட்டர் உயரத்திலிருந்து அருவியாய் கொட்டும் இந்த அருவி ஏலகிரியின் அழகை மேலும் அதிகரிக்கிறது. இதிலிருந்து பல அருவிகள் பிரிந்தும் செல்கின்றனர். இந்த அருவியின் அழகை பார்க்க மழைக்காலம் மிகவும் பொருத்தமானதாகும். இதன் அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது. இந்த அருவி, சுற்றுத்தலமாகவும் ஆன்மீகத்தலமாகவும் பார்க்கப்படுகிறது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் கொண்டை ஊசி வளைவுகளில் சிறிய பாறைகள் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருப்பத்தூர் உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.