India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம், மன வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் உள்ளிட்ட அனைத்து இல்லங்களும் சம்பந்தப்பட்ட துறைகளில் பதிவு செய்யப்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்யாத இல்லங்களுக்கு பதிவு செய்ய 1 மாதம் அவகாசம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களிலும் வசிக்கும் விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் 40 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது. இந்த சலுகைகளை பெற பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 19.10.2024 அன்று காலை 10 மணியளவில் அக்டோபர் மாதத்திற்கான வட்ட அளவிலான குறைத்தீர்வு முகாம் திருப்பத்தூர் அங்கநாதவலசை, நாட்றம்பள்ளி மூக்கனூர், வாணியம்பாடி நன்னேறி, ஆம்பூர் வீராங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலை கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், இந்த நிலையில் இன்று இரவு புதன்கிழமை ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காவலூர், நாட்றம்பள்ளி பகுதிகளில் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள், மொபைல் எண்கள், மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (16.10.2024) புதன்கிழமை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி, கந்திலி, குருசிலாபட்டு பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 18.10.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1- மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 8 வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்துகொண்டு பயன் பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினாலும் மாணவர்கள் படிப்பின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் மழையின் பாதிப்புகள் அதிகம் இல்லை என்பதால் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று செல்லலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், இன்று காலை10 மணி வரை தமிழகத்தின்10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை திருப்பத்தூரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லுவோர் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங் கோயில் கிராமத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கன மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த முகாம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
Sorry, no posts matched your criteria.