Tirupathur

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருவண்ணாமலையில் DR இரா.ரமேஷ் பாபு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2024

நாட்றம்பள்ளியில் பறக்கும் படை அதிரடி

image

நாட்றம்பள்ளியில் 23.03.2024 நேற்று மாலை 5 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆவணம் இன்றி ரூபாய் 1, 62, 800 பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

News March 23, 2024

நாட்றம்பள்ளி: தீவிர கண்காணிப்பு

image

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலைமேல் உள்ள சென்றாய சாமி ஆலயத்தின் உற்சவ விழாவின் 5 ஆம் நாளான இன்று சுவாமியின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News March 23, 2024

வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே பரபரப்பு

image

வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது 17 வயது மகள் பல்லவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மன வேதனையடைந்த பல்லவியின் பெற்றோர் இன்று அம்பலூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News March 23, 2024

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் பலியான சோகம்

image

வாணியம்பாடி ஆம்பூர்பேட்டை சேர்ந்தவர் நிஷாந்த் (20) இவர் காட்பாடியில் வேலை செய்து விட்டு இன்று இரவு தனது வீட்டிற்கு செல்ல வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.  வாணியம்பாடி ரயில் நிலையம் கடந்து மெதுவாக சென்ற போது ஓடும் ரயிலில் இறங்க முயன்றார். அப்போது தவறி விழந்து அதே ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே போலீசார் குவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ சென்றாய சுவாமி ஆலயத்தின் 95 ஆம் ஆண்டு உற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று மாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நாட்றம்பள்ளி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையில் நேற்று இரவு சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2024

ஜோலார்பேட்டை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

image

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மார்ச்.26 திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் செய்து வருகிறார்.

News March 22, 2024

நாட்டறம்பள்ளி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

மக்களவை தேர்தலையொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 267 பூத் மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.

error: Content is protected !!