Tirupathur

News January 28, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜனவரி 27 இரவு முதல் நாளை காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர்

News January 27, 2026

திருப்பத்தூர்: இனி ஏடிஎம்களில் ரூ.10 எடுக்கலாம்!

image

மத்திய அரசு & ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சியாக, இனி ஏடிஎம்களில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் தடையின்றி கிடைக்கும்! டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகினாலும், மக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க ‘ஹைபிரிட் ஏடிஎம்கள்’ மூலம் ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய நோட்டுகளும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி பெரிய நோட்டுகளை மாற்ற அலையத் தேவையில்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

திருப்பத்தூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 27, 2026

திருப்பத்தூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திருப்பத்தூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 27, 2026

திருப்பத்தூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News January 27, 2026

திருப்பத்தூர் அருகே துடிதுடித்து பலி

image

நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி வெங்கடநாயனப்பள்ளி பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மகன் பரத் வயது 17. இன்று காலை பச்சூர் தங்கமலை அருகே இருசக்கர வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News January 27, 2026

திருப்பத்தூர்: சர்க்கரை அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

திருப்பத்தூர் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News January 27, 2026

திருப்பத்தூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

ஆம்பூரில் கடப்பா கல் விழுந்து குழந்தை பலி

image

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ரபீக் நகர் பகுதியை சேர்ந்தவர் வாகித் இவரது 3 வயது குழந்தை, அபியா தஸ்கின், இந்த குழந்தை நேற்று (ஜன.26) இரவு வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் கேட் மீது இருந்த கடப்பா கல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

News January 27, 2026

பாட்டி திட்டியதால், மனமுடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.

image

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியை சேர்ந்த தீபாளி என்பவரது மகள் ஜெஸி பிரிசிலா என்ற 8 ஆம் வகுப்பு மாணவி இன்று (26) வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த்போது, அவருடைய தம்பி இருவரிடையே டிவி பார்ப்பதில், தகராறு ஏற்பட்டதால், ஜெஸி பிரிசிலாவை அவரது பாட்டி திட்டியுள்ளார், இதனால் மனமுடைந்த மாணவி, உள்அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில்,ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..

error: Content is protected !!