Tirupathur

News January 27, 2026

திருப்பத்தூர்: விடுமுறையில் வேலை; பாய்ந்தது நடவடிக்கை!

image

குடியரசு தினவிடுமுறை நாளான நேற்று சட்டவிதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 70 நிறுவனங்கள் மீது தொழிலாளர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தி.மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது 70 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு வர சொன்னதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.26) இரவு முதல் இன்று (ஜன.27) காலை வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

திருப்பத்தூர்: டிகிரி முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கை<<>> கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்!

News January 26, 2026

ரூ1.13 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள்!

image

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகத்தில் இன்று நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக 97 பயனாளிகளுக்கு ரூ 1.13 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்டங்களை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, மகளிர் திட்ட அலுவலர் விஜயகுமாரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

News January 26, 2026

சிறப்பாக பணியாற்றிய மல்லகுண்டா விஏஓ-க்கு சான்றிதழ்!

image

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் கிரவுண்டில் இன்று நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அந்த வகையில் மல்லகுண்டா விஏஓ சந்திரமோகனுக்கு சிறந்த பணிக்கான நன்மதிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News January 26, 2026

31 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

image

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற 31 மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

News January 26, 2026

திருப்பத்தூரில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!