Tirupathur

News January 25, 2026

திருப்பத்தூரில் சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான்

image

ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள பொதிகை தனியார் கல்லூரி வளாகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று (ஜன.25) காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.600,0 மூன்றாம் பரிசு ரூ.4000 அடுத்து வரும் ஏழு நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கபட உள்ளது.

News January 25, 2026

திருப்பத்தூரை நனைத்த சாரல் மழை

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜன.25) அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முன் விளக்குகளை அணைக்காமல் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் நகரம் முழுவதும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

News January 25, 2026

திருப்பத்தூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

திருப்பத்தூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து<> “TNEB Mobile App” <<>>பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 25, 2026

திருப்பத்தூர்: பெண் மீது சரமாரி தாக்குதல்!

image

சிம்மணபுதூர் பகுதியைச் சேர்ந்த தமபதி அருண் (26), தமிழரசி (23). இவர்கள் அப்பகுதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் பொங்கல் வைத்தனர். அப்போது ஊர் நிர்வாகி செல்வராஜை அருண் அழைக்காததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வராஜ், மற்றும் அவருடைய உறவினர்கள் அருண், தமிழரசியை தாக்கி உள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

News January 25, 2026

திருப்பத்தூர் மக்களே OTP வருதா? ALERT!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

திருப்பத்தூரில் கொலை வெறி தாக்குதல்!

image

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரை முன்விரோதம் காரணமாக நேற்று (ஜன.24) இரவு மூன்று இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இதில் காயமடைந்த ஏழுமலை, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News January 25, 2026

திருப்பத்தூர்: கை குழந்தையுடன் பெண் கதறல்!

image

பொன்னேரியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் தியாகராஜன். கணவன் மனைவி இடையே பிரச்சனை காரணமாக அகிலாவை அவரது கணவர் வீட்டில் சேர்க்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவனுடன் சேர்த்து வைக்க கோரி திருப்பத்தூர் கோர்ட்டில் அகிலா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கணவன் வீட்டின் முன் கை குழந்தையுடன் தனது 35 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

News January 25, 2026

திருப்பத்தூரில் பெண் தலை நசுங்கி பலி!

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் நேற்று (ஜன.24) அதே பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூருக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, கலைவாணி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கலைவாணி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 25, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன,24 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் பிணியில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகளுக்கு மேலே உள்ள எண்களை அழைக்கலாம். ஷேர் செய்யுங்க.

News January 25, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன,24 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் பிணியில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகளுக்கு மேலே உள்ள எண்களை அழைக்கலாம். ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!